இலங்கையில் தமிழ் மக்கள் படையினரால் ஆயுதங்களுக்கான உணவாக பயன்படுத்தப்பட்டு வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகமும் அதனோடு இணைந்த குழுக்களும் குற்றம் சுமத்தியுள்ளன.
கனரக ஆயுதங்களை பாவிக்கப் போவதில்லை என அரசாங்கம் அறிவித்த பின்னரும் அரசாங்கம் வைத்திய சாலையின் மீது மேற்கொண்ட எறிகனைத் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர்.
விடுதலைப் புலிகள் பொது மக்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்துவதால் அந்த பிரதேசங்கில் கனரக ஆயுதங்களை பயன்படுத்த போவதில்லை என அரசாங்கம் கூறியதன் பின்னரும் ஐக்கிய நாடுகளின் செய்மதி புகைப்படங்கள் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில் அரசாங்கத்தின் கனரக ஆயுதப் பாவனை புலனாகிறது.
இந்த நிலையில் 'அண்மையில் வெளியான செய்மதிப் புகைப்படங்களும் சாட்சியங்களின் எண்ணிக்கையும் மோதல் பிரதேசங்களில் இடம்பெறுகின்ற பொது மக்களின் அகோரமான கொலைகள் உறுதி செய்வதாக" மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் பிரட் எடம்ஸ் தெரிவித்துள்ளார்.
'அரசாங்கத்தின் இராணுவ முன்னெடுப்புகளுக்கான ஆயுதங்களுக்கு பொது மக்களை இரையாகின்றனர்" என அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் பல்வேறு தாக்கதல்களினால் பொதுமக்கள் பலர் அன்றாடம் கொல்லப்படுகின்றமை உறுதியாகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ' மோதல் பிரதேசங்களுக்கு சுதந்திர ஊடகவியலாளர்களும் உதவி நிறுவன ஊழியர்களும் மற்றும் பொது ஊழியர்கள் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளமையும் கண்டிக்கத்தக்கது என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கைக்கு பிரதானமாக உதவிகளை வழங்கும் அமெரிக்கா ஐரோப்பிய ஒன்றியம் சீனா இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் கொழும்பு அரசாங்கம் மோதல் பிரதேசங்களில் பொது மக்களுக்கு எதிரான தமது கனரக ஆயுதப்பாவனையை நிறுத்த வலியுறுத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் பொது மக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு இரண்டு தரப்பினரும் அனுமதியளிக்க வேண்டும் எனவும் இலங்கையின் மனிதாபிமான நடைமுறை சூழிநிலை குறித்து ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் கலந்துரையாட வேண்டும் எனுவும் பிரட் எடம்ஸ் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment