எதிர்வரும் சனிக்கிழமை 23ம் திகதி ஈழத்தமிழர்வரலாற்றில் இது வரை நடைபெற்றிராத பெரு நிழ்வாக பிரான்சின் விளையாட்டு திடலான Stade Charlty மைதானத்தில் பிற நாட்டு உறவுகளும் கலந்து கொள்ளும் மாபெரும் மக்கள் பேரழுச்சி நிகழ்வு.
உலகின் மிகப்பெரும் விடுதலை அமைப்புக்கள் தமது விடுதலைக்கான குரலை பிரான்சு மண்ணின் மத்தியில் நின்றபடி உரத்துக்கூறிய வரலாற்று அமைவிடமான இவ்விடத்தில் நின்றுகொண்டு தமிழ் மக்களின் விடுதலைப்பேரவாவை, சுதந்திர வேட்கையை, அரசியல் அபிலாசைகளை உரக்கச்சொல்வதற்கு உறுதியோடும் உணர்வோடும், ஓர்மத்தோடும் படை எடுப்போம்.
பிரான்சின் பாரிசு மாநகர சபையின் பேராதரவோடு நடைபெறவிருக்கும் மக்கள் பேரணியோடு அமைந்த ஒன்றுகூடலில் அனைத்து உறவுகளும் அணிதிரளுங்கள்.
பிரான்சில் ஐரோப்பா தழுவிய ரீதியில் மக்கள் கலந்து கொள்ளும் மே 23ம் நாளில் அடங்காப்பற்று மாபெரும் பேரணியும் எழுச்சி நிகழ்வும் உலகத்திற்கு முக்கிய செய்தியை கூறவுள்ளது எனவே அனைவரும் தயாராகுவோம்.
No comments:
Post a Comment