Wednesday, May 13, 2009

அனைத்துலகச செஞ்சிலுவைச்சங்கப் பணியாளரும் அவரது தாயும் பாதுகாப்பு வலயத்தில் பலி!

சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தின் உள்ளுர் பணியாளர் ஒருவர் இன்று புதன்கிழமை மதியம் பாதுகாப்பு வலயத்தில் இராணுவம் மேற்கொண்ட ஷெல்த்தாக்குதலில் பலியாகியுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்துள்ளது.

அதேவேளை இந்தச்சம்பவத்தில் மேற்படி பணியாளரின் தாயாரும் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பேச்சாளர் சரசி விஜேரட்ன கருத்து தெரிவிக்கையில்,

பாதுகாப்பு வலயத்தில் தற்போது சேவையாற்றும் ஒரே ஒரு அமைப்பாக சர்வதேச செஞ்சிலுவைச்சங்கமே உள்ளதென்றும், அங்கு தொடர்ந்தும் செஞ்சிலுவைத் தொண்டர்கள் பணியாற்றிவருவதாகவும், இன்று இடம்பெற்ற ஷெல் வீச்சில் 31 வயதுடைய சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தின் உள்ளுர் பணியாளர் ஒருவர் பலியானதுடன் அவரது தாயாரும் இறந்துள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.