சிறி லங்காவை துண்டாட பல ஆண்டு காலமாக சதிசெய்து வரும் ஐரோப்பிய நாடுகளுடனான சகல வகையிலான உறவுகளையும் முற்றாகத்துண்டித்துவிட்டு பாகிஸ்தான், சீனா, ரஸ்யா, உட்பட அரேபிய நாடுகளுடனான இராஜதந்திர உறவுகளை மேம்படுத்தும் வண்ணம் சிறி லங்கா அரசாங்கம் உடன் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அந்த இயகத்தின் தலைவர் தபர அமில தேரர் கூறியதாவது, சிறி லங்காவைத் துண்டாடும் நோக்கத்தோடு பிரிவினைவாத சக்திகள் ஐ.நா சபை, சார்க், ஐரோப்பிய ஒன்றியம், போன்ற அமைப்புக்களின் உளளேயும் நின்று செயற்பட்டுக்கொண்டிருக்கின்றன.
இதன் வெளிப்பாடுகளை ஐ.நாவில் சிறி லங்காவுக்கு எதிராக போர்க்குற்றச்சாட்டுக்களை முன்வைக்க சிலர் ஆதரவு வழங்க எத்தனித்தபோது அவதானிக்கமுடிந்தது. சிறிலங்காவுக்கு எதிராக பிரித்தானியா, கனடா, ஜேர்மனி, பிரான்ஸ், சுவிஸ், இத்தாலி, உட்பட்ட 12 நாடுகள் குரல் கொடுத்தன.
இந்த நாடுகள் அனைத்துமே கடந்த 30 அண்டுகளாக சிறி லங்காவைத் துண்டாட பிரிவினைவாத தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு பல்வேறு வகைகளில் உதவிகளை புரிந்துள்ளன.
எனவே இந்த நாடுகளின் உதவிகளோ, தொடர்புகளோ சிறி லங்காவின் எதிர்காலத்திற்கு நன்மை அளிக்கப்போவதில்லை. இவர்களுடனான உறவுகளைத்துண்டித்துவிட்டு எந்தவகையான உள்நோக்கமும் இல்லாமல் சிறி லங்காவுக் நேர்மையாக உதவி செய்தவரும் சீனா, ரஸ்யா, பாகிஸ்தான், ஆராபிய நாடுகளுன் ஒன்றிணைந்து செயற்படக்கூடிய வெளிவிவகாரக்கொள்கை ஒன்றினை அரசாங்கம் கையாளவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
v
No comments:
Post a Comment