"இந்தியாவின் துரோகத்தனம் காரணமாகவே இலங்கையில் தமிழ் மக்கள் அவலத்தில் சிக்கியுள்ளனர். இம்மக்களது இழப்புகள் அனைத்திற்கும் இந்தியாவே பொறுப்பேற்க வேண்டும். பெரும்பான்மை இன கட்சிகளோடு இணைந்த இடதுசாரிகளும் சிறுபான்மை இன கட்சிகளும் மக்களுக்கு எதுவிதமான சேவைகளும் செய்ததில்லையென்பதே வரலாறாகும்'' என்று இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்தார்.
கொழும்பு புறக்கோட்டை பழைய நகரசபை மண்டபத்தில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை முன்னணியின் முக்கியஸ்தர் மு. முனுசாமி (மானவ ஜீவன்) தலைமையில் இடம்பெற்ற அரசியல் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது, ""நாட்டில் இன்று அடக்கு முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. கடுமையான யுத்தத்தால் வன்னிப் பகுதியில் சிறிய பிரதேசத்திற்குள் பெரும்பாலான மக்கள் சிக்கியுள்ளனர். இம் மக்களுக்கு என்ன நடந்தாலும் கவலையில்லை. யுத்தத்தை முடிக்க வேண்டுமென்ற கொடூரத் தன்மையில் அரசாங்கம்படை நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றது. தமிழர் சங்காரத்திற்கான அனைத்து உதவிகளையும் இந்தியாவே வழங்கி வருகின்றது. இதற்கு பக்கபலமாக அமெரிக்காவும் சிறீலங்கா அரசாங்கத்திற்கு உதவிகளை வழங்கி வருகின்றது. ஆனால் வெறுமனே இங்கு வந்து தமிழ் மக்கள் பாதுகாக்கப்பட வேண்டுமென இரு நாட்டுப் பிரதிநிதிகளும் முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர். இது தான் உண்மை. எமது முன்னணி நெருக்கடிக்குள் சிக்கியுள்ள மக்களுக்காகவே குரல் கொடுக்கின்றது. விசாலமான சிங்கள சமூகத்திற்குள் தமிழ் சமூகம் சிக்கிக் கொண்டுள்ளது.
No comments:
Post a Comment