யாழ் அரச அதிபர் வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து சிறீலங்கா அரசாங்கத்தின் தடுப்பு முகாம்களில் வதியும் மக்களுக்கு உணவூட்டுவதற்கு தனியார் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களை உதவுமாறு கேட்கநிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்.
கடந்த செவ்வாய்கிழமை யாழ் செயலகத்தில் இடம்பெற்ற யாழ்வர்த்தக சங்கபிரதிநிதிகள், அரசபிரதிநிதிகள் மற்றும் அரசசார்பற்ற பிரதிநிதிகள் கூட்டத்திலேயே இவர் இவ்வாறு கேட்டுக்கொண்டதாக தெரியவருகிறது.
இவ்தடுப்பு முகாம்களில் உள்ள பாலுட்டும் தாய்மாரே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்கள் சத்துணவுப்பற்றாக்குறையால் அதிகம் தாக்கமடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது.
இத்தடுப்பு முகாம்களில் 168 கருவுற்ற பெண்களும் 257 பாலூட்டும் தாய்மாரும், 320 சிசுக்களும், 387 குழந்தைகளும் உள்ளதாக யாழ்செயலக வட்டார புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment