Saturday, May 9, 2009

அகதி முகாம்களில் பணியாற்ற தொண்டு நிறுவனங்களுக்கு அனுமதியளிக்கப்பட வேண்டும் ‐ ஜெஹான் பெரேரா

யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டு அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள அப்பாவி பொதுமக்களுக்கு தேவையான மனிதாபிமான பணிகளை தொடர தொண்டு நிறுவனங்களுக்கு அனுமதியளிக்கப்பட வேண்டும் என தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜெஹான் பெரேரா தெரிவித்துள்ளார். வன்னி மக்கள் எதிர்நோக்கியுள்ள மாபெரும் மனிதப் பேரவலத்தை தடுத்து நிறுத்த தொண்டு நிறுவனங்களின் ஒத்துழைப்பை அரசாங்கம் தாமதமின்றி பெற்றுக்கொள்ள வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டுஇ வெளிநாட்டு தொண்டு நிறுவன ஊழியர்கள் அகதி முகாம்களுக்குள் பிரவேசிக்கக் கூடாது என அரசாங்கம் இம்மாதம் 3ம் திகதி உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு மற்றும் வெளிப்படைத் தன்மை ஆகியவற்றுக்கு இடையிலான சமநிலைத் தன்மையை பேண அரசாங்கம் தவறக்கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த 2008ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் யுத்த வலயங்களுக்கு தொண்டு நிறுவனங்கள் செல்லக் கூடாது என அரசாங்கம் தடையுத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த தடையுத்தரவு காரணமாக பொதுமக்கள் உணவு மருந்துப் பொருள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி அல்லலுறுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் உள்ள அகதி முகாம்களில் தங்கியுள்ள 200000 அப்பாவி பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக யாழ்ப்பாண பேராயர் தோமஸ் சௌந்தரநாயகம் தெரிவித்துள்ளார்.

கழிவறை வசதிகள் சுகாதார வசதிகள் மற்றும் தொடர்ச்சியான உணவு விநியோகம் போன்றவை உறுதிப்படுத்தப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியாஇ மன்னார் மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள அகதி முகாம்கள் மற்றும் வைத்தியசாலைகளை பார்வையிட்டதனைத் தொடர்ந்து அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

அதிக சனநெரிசல் காணப்படுவதனால் அகதி முகாம்களில் வசிப்போர் உடல் மற்றும் உள ரீதியான அழுத்தங்களை எதிர்நோக்கி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அகதி முகாம்களில் தங்கி வாழ்வோருக்கு சிறப்பான சேவைகளை வழங்க உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொண்டு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டியது மிகவும் அவசியமானதென பேராயர் கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.