Monday, May 25, 2009

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலக வேண்டும்: ஆனந்தசங்கரி


இதுவரை காலமும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டு வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை இராஜினாமா செய்ய வேண்டுமென தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
அண்மையில் இந்திய இராஜதந்திரிகள் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த போது அரசியல் ரீதியான தீர்வுத் திட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணக்கம் தெரிவித்துள்ளது. 

அரசியல் தீர்வுத் திட்டம் குறித்த இணக்கத்தை முன்னரே வெளிப்படுத்தியிருந்தால் வடக்கில் உயிரிழந்த பலரின் உயிர்களை காத்திருக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

இவ்வாறான நபர்கள் தொடர்ந்தும் தமிழ் மக்களின் சார்பில் குரல் கொடுப்பதனை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.