
ஜ.நா செய்மதியூடாக முல்லைத்தீவை சுமார் ஒரு மாதகாலம் புகைப்படம் எடுத்திருந்தது.
இதனையடுத்து ஏனைய தமிழ் ஊடகங்களும் இச் செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்த நிலையில், தமிழ் நெட் இணையத்தளமும் ஆங்கிலத்தில் இச் செய்தியை பிரசுரித்தது. பாதுகாப்பு வலயத்தில் தாம் தாக்குதல் நடத்தவில்லை என கூறிவந்த இலங்கை அரசாங்கத்தை இச் செய்தி பெரும் நெருக்கடியில் தள்ளியுள்ளதால் இலங்கை அரசு கடும் விசனமடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து ஜ.நா வுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை அரசு தீர்மானித்திருப்பதாக நம்பகரமான இரகசியத் தகவல் ஒன்று தெரிவிக்கிறது. இலங்கையில் உள்ள ஜ.நா தூதுவரிடம் முதலில் விளக்கம் கோரியுள்ள இலங்கை அரசு, இன்று மாலை சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆராய்ந்துள்ளதாக இணையத்தின் புலனாய்வுப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment