சுவீடன் பாராளுமன்ற முன்றலில் ஈழத்தமிழர் நந்தன் என்பவரால் நடாத்தப்படும் உண்ணாநிலைப் போராட்டம் 5ஆவது நாளாகத் தொடர்கின்றது. அவருக்கு ஆதரவு தெரிவித்து அடையாள உண்ணாவிரதத்தைப் பலரும் மேற்கொண்டனர்.
சில பாராளுமன்ற உறுப்பினர்கள் இடையிடையே வந்து நந்தனை சந்தித்துப் பேசினர். எமது மக்களை ஏன் உலகம் இன்னும் திரும்பிப் பார்க்கவில்லை? என்ற ஆதங்கத்தோடு பாராளுமன்ற உறுப்பினர்களுடன் உரையாடல் நடந்தது. நந்தனைச் சூழ ஏராளமான மக்கள் நின்று கொட்டொலிகளை எழுப்பினர்.
ஆயிரக்கணக்கான துண்டுப்பிரசுரங்கள் மக்களுக்கு வினையோகிக்கப்பட்டது. தமிழீழத் தனியரசை அங்கீகரிக்கக்கோரிய கையெழுத்துவேட்டையும் நடைபெற்றது.
உண்ணாநிலைப் போராட்டம் பாராளுமன்ற முன்றலில் தொடற்சியாக நடைபெற்றவண்ணம் உள்ளது. அனைத்து சுவீடன் வாழ் தமிழர்களையும் இதில் பங்குகொள்ளுமாறு உரிமையுடன் ஏற்பாட்டாளர்கள் வேண்டுகின்றனர்.
No comments:
Post a Comment