கொல்லப்பட்டதாக கூறி தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் சடலம் என அரசாங்கம் அறிவித்து வரும் சடலத்தின் மரபணுவை சென்னையில் உள்ள அவரது மூத்த சகோதரியின் மரபணுவுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் நேற்று சென்னையில் வைத்து செய்தியாளர்கள் மத்தியில் இந்த கருத்தினை தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் தலைவர் பிரபாகரன் இறந்துவிட்டதாக கூறி அவரது சடலத்தை வெறும் ஒளிப்படங்கள் மூலம் மாத்திரமே காண்பித்தது. இந்த சடலம் பிளாஸ்ட்டிக் சேர்ஜரி செய்யப்பட்ட ஒருவரின் சடலம் என்பதே உண்மை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
இராணுவத்தினரால் ஏற்படுத்தப்பட்ட இரத்த களரியில் 25000 பொது மக்கள் கொல்லப்பட்டு 40000க்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
தற்போதும் அவர்கள் பாதுகாக்கப்படாமல் துரதிஸ்ட்ட வசமான முறையில் வாழ்கின்றனர். அவளை பாதுகாக்க சர்வதேச சமூகங்களான ஐக்கிய நாடுகள் சபை மற்றும் நேட்டோ அமைப்பு ஆகின முன்வர வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை போர் இடம்பெற்ற பகுதிகளுக்கு சர்வதேச கண்காணிப்பாளர்கள் சென்று பார்வையிட வேண்டும் அவ்வாறு பார்வையிட்டால் அங்கு மேற்கொள்ளப்பட்ட இன அழிப்புகள் குறித்து அறிந்து கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை தற்போது இராணுவ வெற்றிகளை கொண்டாட ஆரம்பித்து வடக்கு மற்றும் மலையக தமிழர்களையும் முஸ்லிம்களையும் கவலையடைய செய்துள்ளனர்.
தமிழ் கோவில்கள் உடைக்கப்படுகின்றன பௌத்த விழாக்களுக்கு மாத்திரமே முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது என அவர் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இவையனைத்துக்கும் ஒரே தீர்வு தனித்தமீழம் அமைவதே எனவும் அதனை தமிழீழ விடுதலைப் புலிகள் ஒருநாள் அடையும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம்
No comments:
Post a Comment