மீண்டும் இலங்கைக்கு திரும்புமாறு புலம் பெயர் தமிழ் மக்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்த வெற்றி குறித்து பாராளுமன்றத்தில் இன்று ஆற்றிய விசேட உரையின் போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாதத்தினால் அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லப்பட்ட தேசத்தை மீளக் கட்டியெழுப்பு, அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள புலம்பயெர் தமிழர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென ஜனாதிபதி கோரியுள்ளார்.
விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் பாதை, நீர் வடிகாமைப்பு மற்றும் மின்சாரவசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டில் வசிக்கும் வர்த்தகப் பிரமுகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்ய முன்வர வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
No comments:
Post a Comment