Wednesday, May 20, 2009

தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் அதிகாரப்பகிர்வு ஒன்று அவசியம்: அமெரிக்கா கொழும்புக்கு அழுத்தம்

தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் அதிகாரப்பகிர்வு ஒன்று அவசியம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என அமெரிக்கா இலங்கை அரசாங்கத்திடம் வலியறுத்தியுள்ளது.

இதன் பொருட்டு கொழும்பு அரசாங்கம், அதிகாரப்பகிர்வு உடன்படிக்கை ஒன்றினை ஏற்படுத்தி முன்வைக்க வேண்டும் என அமெரிக்கா இராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் இயன் கெலி தெரிவித்துள்ளார்.

உண்மையில் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு விட்டதாக அரசாங்கம் அறிவிக்க வேண்டுமானால், மோதல்களில் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டமையால் ஏற்பட்ட களங்கத்தை அரசாங்கம் முதலில் துடைக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இடம்பெயர்ந்தவர்களின் சுதந்திரமான வாழ்வினை உறுதி செய்து, நாட்டில் ஜனநாயகத்தை ஏற்படுத்துவதன் ஊடாகவே உண்மையில் அரசாங்கம் பயங்கரவாதத்தை தோற்கடித்ததாக அமையும் என அவர் தெரிவித்துள்ளார்.

பக்கச்சார்பின்றி, அனைத்து மக்களுக்கும் பொதுவான ஆட்சியினை அரசாங்கம் ஏற்படுத்துமானால் அதுவே உண்மையான வெற்றியாகவும் அமையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு இறுதியானதும், உறுதியானவுமான சமாதானம் ஒன்றை ஏற்படுத்த வேண்டுமானால், அதிகாரப்பகிர்வு ஒன்று கட்டாயம் தேவை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.