Tuesday, May 5, 2009

பிரிட்டனில் புகலிடம் கோரி விண்ணப்பித்த இரு இலங்கையருக்கு பிரி. மேல்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது

இலங்கையிலிருந்து வெளியேறி இங்கிலாந்தில் புகலிடம் கோரிய ஈழத் தமிழர்கள் இருவரை மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்தினால் அது அவர்களைக் கொலை செய்வதற்கு சமம் என இங்கிலாந்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், அவர்கள் தொடர்ந்து இங்கிலாந்திலேயே தங்கவும் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இது குறித்து தெரியவருவதாவது:-

இலங்கையைச் சேர்ந்த அண்ணன் தங்கையான அவ்விருவரும் கடந்த 2003ஆம் ஆண்டு லண்டன் வந்தனர். இலங்கையில் தாங்கள் சித்திரவதைக்கும், பாலியல் வல்லுறவுக் கொடுமைக்கும் ஆளானதாகக் கூறி, அகதிகளாகத் தங்களை அங்கீகரிக்கக் கோரி இங்கிலாந்து குடியேற்றத் துறைக்கு அவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.

ஆனால் குடியேற்றத்துறை இவ்விண்ணப்பத்தை ஏற்கவில்லை. மேலும் இருவரையும் நாடு கடத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து இருவரும் மேல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அதில், தங்களை நாடு கடத்தினால் இருவரும் தற்கொலை செய்து கொள்வோம் எனக் கூறியிருந்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் செட்லி, ஆர்டன், மோசஸ் ஆகியோர், "இருவரையும் மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்தினால் இருவரும் தற்கொலை செய்து கொள்ளக் கூடும். மேலும் நாமே அவர்களைக் கொன்றது போலவும் ஆகிவிடும். இது ஐரோப்பிய மனித உரிமை மாநாட்டுப் பிரகடனத்திற்கு விரோதமானது" என்று தீர்ப்பளித்துள்ளனர்.

மேலும் சகோதர, சகோதரிகள் இங்கிலாந்திலேயே தங்கவும் அவர்கள் அனுமதி அளித்துள்ளனர். இங்கிலாந்து அரசுக்கு இந்தத் தீர்ப்பு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

இதுகுறித்து இங்கிலாந்து குடியேற்றப் பிரிவுத்துறை அமைச்சர் பில் ஊலஸ் கூறுகையில், "இது பொது அறிவே இல்லாத தீர்ப்பு. எதிர்காலத்தில் இங்கிலாந்துக்குச் சட்டவிரோதமாக வருவோரும், அகதிகளும் இந்தத் தீர்ப்பைக் காட்டி இங்கேயே தங்க முயற்சிக்கும் அபாயம் அதிகரித்துள்ளது. இதை எதிர்த்து நாங்கள் லார்ட்ஸ் சபையில் மனு தாக்கல் செய்வோம்" எனத் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.