அம்பாறை மாவட்டத்தில் உள்ள கஞ்சிக்குடிச்சாறு வனப் பகுதியில் சிறிலங்கா படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய இருவேறு தாக்குதல்களில் மூன்று படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக அம்பாறை மாவட்ட விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்துள்ளதாவது:
கஞ்சிக்குடிச்சாறு வனப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளை தேடியழிக்கும் பாரிய நடவடிக்கையில் சிறிலங்கா படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் நேற்று சனிக்கிழமை விடுதலைப் புலிகளின் பொறிவெடி வியூகங்களில் சிக்கினர்.
இதில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார். இதேவேளையில் நேற்று முன்நாள் சிறிலங்கா படையினர் மீது விடுதலைப் புலிகள் நடத்திய பிறிதொரு தாக்குதலில் இரண்டு படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment