Saturday, May 9, 2009

கனடா,மொன்றியலில் பேரெழுச்சி பெற்ற அடங்காப்பற்று மனிதசங்கிலி பேரணி; பல்லாயிரம் மக்கள் பங்கேற்பு

கடந்த இரண்டு வாரங்களாக கனடா, மொன்றியலில் அமைந்துள்ள அமெரிக்க துணைத் தூதுவராலயத்திற்கு முன்பாக இரவு பகலாக தொடர்போராட்டத்தை நடாத்தி வரும் மக்கள் இன்று மாலை 3 மணியளவில் அடங்காப்பற்று என்னும் மகுடத்தின் கீழ் மாபெரும் மனிதசங்கிலி பேரணியையும் வீதிமறிப்பு போராட்டத்தையும் நடத்தினர்.

இம் மனிதசங்கிலிப் பேரணியைத் தொடர்ந்து நடைபெற்ற எழுச்சிப் பொதுக்கூட்டம், பொதுச்சுடர் ஏற்றலுடன், கியூபெக் கனேடிய கொடிகளோடு தமிழீழ தேசியக்கொடியும் ஏற்றப்பட்டு ஆரம்பமானது.

இவ் எழுச்சிக் கூட்டத்தில் அமெரிக்காவில் இருந்து வருகை தந்திருந்த மனித உரிமைகள் ஆர்வலர் கரன் பார்க்கர் அம்மையார் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தின் நியாயத்தன்மையை வலியுறுத்தி சிறப்புரை வழங்கினார்.

தொடர்ந்து ஒன்ராறியோ மாநகர கல்விச்சேவை உறுப்பினர் நீதன் சண் அவர்களின் சிறப்புரையை தொடர்ந்து மாணாவர்களின் உரைகளோடு கொடி இறக்கத்துடன் கூட்டம் நிறைவுபெற அங்கே அலையெனத் திரண்டிருந்த மக்கள் அனைவரும் பிரதான வீதியை மறித்து வீதிமறியல் போராட்டத்தையும் நடத்தினர். அத்துடன்,

உடனடி மருந்து, உணவுத்தேவைகளைப் பூர்த்தி செய்யும்படியும்,

தொடரும் தமிழினப் படுகொலையை உடனடியாக நிறுத்தும்படியும்:

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடயை நீக்கவும்,

ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீக்கரிக்க வேண்டும்

என்னும் ஆகிய கோரிக்கைகள் நிறைவேறும்வரை இப்போராட்டம் தொடரும் என அறிவிக்கபப்ட்டு தொடர்ந்தவண்ணம் உள்ளது.



No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.