நாட்டின் மீது எனக்கு இல்லாத அளவு அக்கறை வெள்ளைக்காரர்களுக்கு எங்கிருந்து வந்ததென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார். ஆயுதங்களை களைந்து, சரணடைய இன்னமும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சந்தர்ப்பம் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
15000 சதுர கிலோ மீற்றர் வரையில் வியாபித்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகக் கட்டமைப்பை தற்போது ஐந்து சதுர கிலோ மீற்றர் வரையில் குறைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
படையினரும், பொதுமக்களும் யுத்த வலயத்தில் இருப்பதனால் விமான மற்றும் ஆட்லறித் தாக்குல்களை நடத்த வேண்டாமென பணிப்புரை விடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எந்தவொரு சர்வதேச சக்திகளுக்கும் அடி பணிந்து தாம் கன ரக ஆயுத பாவனையை நிறுத்தவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத்தை ஆதரித்த உலகத் தலைவர்கள் பயங்கரவாதிகளின் தாக்குதல்களிலேயே உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பிரேமதாஸ, ராஜீவ் காந்தி போன்றவர்களை இதற்கு உதாரணமாக காட்ட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment