Monday, May 25, 2009

யாழ்.மாநகர சபைக்கும் வவுனியா நகரசபைக்கும் ஆகஸ்ட் 8 ம் திகதி தேர்தல்

யாழ்.மாநகரசபை, வவுனியா நகரசபை உள்ளிட்ட வடக்கின் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 8 ம் திகதி நடைபெறும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. 

தேர்தல் நடத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தலைமையில் அவரது அமைச்சில் நேற்று மாலை நடைபெற்றது. அப்போதே தேர்தல் திகதி தீர்மானிக்கப்பட்டது.

தேர்தலுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்வதற்கான அறிவித்தல் நேற்று  நள்ளிரவு வர்த்தமானியில் வெளியிடப்பட விருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதற்கமைய ஜுன் மாதம் 4 ம் திகதி வேட்பு மனு கோரல் பற்றிய அறிவித்தல் விடுக்கப்பட்டதன் பின்னர் ஜுன்மாதம் 17 ம் திகதி முதல் 24 ம் திகதி நண்பகல் 12 மணி வரையான காலப்பகுதியில் வேட்பு மனுக்கள் பொறுப்பேற்கப்படவுள்ளன.

யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததன் பின்னர், அந்தப் பகுதியில் ஜனநாயக செயற்பாடுகளை நிலைநாட்டுவதற்காக மேற்கொள்ளப்பட்ட முதலாவது நடவடிக்கையே இந்தத் தேர்தலாகும் என்று உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் கூறினார்.

விடுதலைப் புலிகள் முன்னர் தமது கட்டுப்பாட்டினுள் வைத்திருந்த வன்னிப் பிரதேசத்தை அண்மித்துள்ள யாழ்ப்பாணத்திலும் வவுனியாவிலும் பத்து வருடங்களுக்கும் அதிகமான காலத்தின் பின்னர் அதாவது 1998 ம் ஆண்டிற்குப் பின்னர் இந்த உள்ளுராட்சி தேர்தல்கள் நடைபெறவிருக்கின்றன என்று அவதானிகள் தெரிவித்தனர்.

இதேநேரம் இந்தத்தேர்தலில் பயன்படுத்தவிருக்கும் வாக்காளர் பட்டியல் பற்றி இன்னும் எதுவும் தீர்மானமாகவில்லை என தேர்தல் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன.

2008 ம் ஆண்டின் வாக்காளர் பட்டியல் தொடர்பான நடவடிக்கைகள் அனைத்தும் மே மாத இறுதிக்குள் நிறைவு செய்யப்பட்டு அத்தாட்சிப்படுத்தப்பட்டு விடுமென தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்திருந்த நிலையில், அப்படியில்லாத பட்சத்தில் 2007 ம் ஆண்டு வாக்காளர் பட்டியல் பயன்படுத்தப்படலாம் என்றும் அந்த வட்டாரங்கள் சுட்டிக்காட்டின.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.