தமிழ் தேசியத்தலைவன் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார். ஈழத்தில் மீண்டும் பிரபாகரன் தலைமையில் 5 ஆவது கட்டப்போர் வெடிக்கும் என்று தொல் திருமாவளவன் கூறினார்.
ஈழத்தில் வீர மரணம் அடைந்த விடுதலைப்புலிகளுக்கும், களப்பலியான தமிழர்களுக்கும் வீரவணக்கம் செலுத்தும் வகையில் அமைதி ஊர்வலம் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னையில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது.
அப்போது பேசிய திருமாவளவன், ஒரே நாளில் 50 ஆயிரம் பேர்களை கொன்றுவிட்டு உலக மக்கள் பார்வையை மறைக்க பிரபாகரனை சுட்டுக்கொன்றுவிட்டதாக சிங்கள இனவெறியன் கோழை ராஜபக்ஸ அண்டப்புழுகினான். கடந்த ஜனவரி 2 ஆம் திகதி கிளிநொச்சி பகுதியை இராணுவம் கைப்பற்றியது என்ற செய்தி அறிந்து மிகவும் துடித்துப்போனேன்.
அன்று முதல் தொடர்ந்து பல போராட்டங்களை நடத்தினோம். தமிழக தலைவர்களை சந்தித்து பேசினேன். ஆனால் அதில் எந்தவித பயனும் கிடைக்கவில்லை. ஜனவரி 15 ஆம் திகதி சாகும்வரை உண்ணாவிரதம் தொடங்கினேன். இலங்கையில் போரை நிறுத்த ஏற்பாடு செய்வதாக தலைவர்கள் கூறியதால் உண்ணாவிரதத்தை கைவிட்டேன்.
நான் உண்ணாவிரதம் இருந்ததை பார்த்து தமிழ் இன உணர்வால் பொங்கிய முத்துக்குமார் தீக்குளித்து உயிர் துறந்தார். இலங்கையில் இலட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். கடைசி நிமிடம் வரை இந்திய அரசு நமது வேண்டுகோளை ஒருபொருட்டாக நினைக்கவில்லை.
இலங்கைக்கு சீனா உதவுகிறது. நாங்களும் புலிகள் தான். நாங்கள் பிரபாகரனின் தம்பிகள். பிரபாகரன் உயிருடன் இருக்கிறார். ஈழத்தில் 4 ஆவது கட்ட போர் முடிந்து விட்டது. 5 ஆவது கட்ட போர் மீண்டும் பிரபாகரன் தலைமையில் வெடிக்கும் என்றார்.
No comments:
Post a Comment