திருகோணமலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பிரித்தானியாவைச் சேர்ந்த 'சனல் 4' தொலைக்காட்சி நிறுவனத்தைச் சேர்ந்த மூன்று செய்தியாளர்களும் இன்று இலங்கை அரசினால் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று பிரித்தானிய வெளியுறவுத்துறை அலுவலகம் உறுதி செய்துள்ளது.
இலங்கையில் இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கான முகாம்களில் கொலைகள் உட்பட பல்வேறு மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளன என்று செய்தி அறிக்கை வெளியிட்ட பிரிட்டனின் சேனல்-4 தொலைக்காட்சிச் சேவையின் செய்தியாளர்கள் சேனல்-4 தொலைக்காட்சிச் சேவையின் ஆசிய முகவர் நிக் பட்டன்-வால்ஷ், ஒளிப்பதிவாளர் மற் ஜாஸ்பர் மற்றும் தயாரிப்பாளர் பெஸ்ஸி டு ஆகியோரை நாட்டை விட்டு வெளியுறுமாறு இலங்கைப் பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஆணையிட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை பிரிட்டனின் சேனல்-4 தொலைக்காட்சியில் காட்டப்பட்ட இவர்களின் செய்தி அறிக்கை இந்த முகாம்களில் இறந்தவர்களின் உடல்கள் கண்டுகொள்ளப்படாமல் உள்ளன என்றும், பாலியல் பாலத்கார வன்முறைகள் நடக்கின்றன என்றும் தெரிவித்திருந்தது.
இந்த தொலைக்காட்சி நிறுவனத்தின் செய்தியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளமை ஆழ்ந்த ஏமாற்றத்தை அளிக்கிறது என்று பிரித்தானிய வெளியுறவு அமைச்கம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment