வன்னியில் எமது உறவுகள் ஆயிரமாயிரமாக கொல்லப்பட்டு ஊரே சுடுகாடாகியுள்ள நிலையில் சொல்லொணாத் துயரடைந்த மக்கள் இன்று லண்டனின் மையப்பகுதியில் கூடி நிற்கின்றனர்.
இலங்கை இந்திய அரசுகளின் கோரத்தாண்டவம் வன்னியில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. ஒரு குறுகிய நிலப்பரப்புக்குள் செறிவாக்கப்பட்ட மக்கள் மீது நடாத்தப்படுகின்ற குண்டுவீச்சுகளின் மூலம் மக்களை முற்றாக அழித்து ஒழிக்கத் திட்டம் போட்டுள்ளது சிங்கள இன வெறி அரசுஃ
பாராளுமன்ற சதுக்கத்தில் அலையென திரண்டெழுந்த மக்கள்
மீது லண்டன் காவல்துறையினர் கலகம் அடக்கும் படைகளை தருவித்து
பெண்கள் முதியோர் சிறுவர் என பலதரப்பட்டவரையும்
தள்ளி உதைத்து விழுத்தியும் அடி தடி வன்முறைகளை பிரயோகித்தும்
தமது அடாவடிகளை புரிந்துள்ளனர்.
இந்த கலகங்களையும் பொருட்படுத்ததாது தொடர்ந்து தமிழீழ மக்கள்
தமது போராட்டத்தை தொடர்ந்த வண்ணம் உள்ளனர்.
தற்போது இங்கிலாந்தின் காவல்துறை பெச்சாளர் தெரிவித்துள்ளதாவது தாம் 31 தமிழர்களை கைது செய்துள்ளதாகவும்.
இவர்கள் பாராளுமன்ற சதுக்க வீதியை முற்றுகையிட்டு தடைசெய்தமையாலேயே இவர்களை கைது செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் மக்கள் இடைவிடாது தொடராக தமது போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment