Friday, May 15, 2009

தஞ்சமடைய முற்பட்ட 150 ற்கும் மேற்பட்ட மக்கள் படையினரால் சுட்டுக்கொலை

வன்னி முள்ளிவாய்க்கால் பாதுகாப்பு வலயம் மீது சிறீலங்கா படையினர் மேற்கொள்ளும் கடுமையான தாக்குலால் அங்கிருந்து வெளியேறி படையினரிடம் தஞ்சம் கோர முற்பட்ட மக்கள் சிறீலங்கா படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
இன்று அதிகாலைமுதல் பாதுகாப்பு வலயம் மீது சிறீலங்கா படையினர் கனரக ஆயுதங்கள் சகிதம் இனவழிப்புத் தாக்குதலை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால் ஐந்து சதுர கிலோமீற்றர் பரப்பளவில் முடக்கப்பட்டுள்ள மக்கள் செய்வதறியாது உயிரச்சம் காரணமாக சிறீலங்கா படையினரிடம் தஞ்சம்கோர முற்பட்டபோது ஒரே நேரத்தில் 150இற்கும் மேற்பட்ட மக்கள் சிறீலங்கா படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

இதேவேளை சிறீலங்கா படையினரது தாக்குதல்களில் மேலும் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ள போதிலும் அது பற்றிய விபரங்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.