Thursday, May 14, 2009

பிரித்தானியாவில் நாளை (15-05-09) தமிழின அவலத்தை பிரதிபளிக்கும் கறுப்பு கொடி போராட்டம்

கடந்த 39 நாட்களாக முன்னெடுக்கப்படும் கவனயீர்ப்பு போராட்டத்தில் வழமைபோல் பெண்கள் குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் கலந்துகொண்டு தங்கள் போராட்டத்தை மேற்கொண்டனர். இதில் முக்கிய அம்சமாக துருக்கி நாட்டின் பழமை வாய்ந்த இனமும் தங்கள் உரிமைக்காக போராடும் இனமும் ஆன கேடிஸ் இனத்து மக்கள் கலந்துகொண்டு தங்கள் இனத்தின் கொடிகளையும் தமது வீரர்களின் புகைப்படங்களை தாங்கியவாறு தங்களுக்கே உள்ள பாணியில் கைகளைத் தட்டி ஒரு புதுவிதமாக கவனயீர்ப்பை மேற்கொண்டனர். அதுமட்டுமின்றி தமிழ் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக குரல் எழுப்பியதுடன் தமிழீழ தேசிய தலைவரின் புகைப்படத்தையும் தாங்கி நின்றனர்.



கடந்த 48 மணிநேரமாக பட்டினி கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொள்ளும் இரண்டு பெண்கள் உட்பட 6 தமிழ் மக்களும் உடல் தளர்ந்த போதும் தங்கள் போராட்டத்தை உறுதியுடன் முன்னெடுக்கின்றனர். இதேவேளை இலண்டன் சுற்றுலா மையமான வுசயகயடபயச சதுக்கத்தில் மாலை 2 மணியிலிருந்து 6 மணி வரை துண்டுபிரசுர கவனயீர்ப்பு போராட்டம் பெண்கள் உட்பட இருநூற்றிற்கும் மேலான தமிழ் மக்களால் மேற்கொள்ளப்பட்டது. இந்த துண்டுபிரசுரங்களை பலர் மனம் உவந்து வேண்டி படித்ததுடன் தமிழீழத்தில் நடக்கும் அவலங்களை பற்றியும் கேட்டு அறிந்துகொண்டனர்.



தமிழீழ தாயகத்தில் இன்றும் 1000 இற்கும் மேலான தமிழ் மக்கள் சிறீலங்கா அரசாங்கத்தின் தமிழின படுகொலைக்கு இரையானதை அடுத்து மிகவும் சீற்றம் அடைந்திருக்கும் மாணவர்களால் நாளை கறுப்பு கொடி போராட்டம் முன்னெடுக்கபடவுள்ளது.



அனைத்து பிரித்தானிய வாழ் தமிழ் மக்களும் நாளை கறுப்பு நிற ஆடைகளுடன் நாடாளுமன்ற சதுக்கத்தை நிரப்பி பிரித்தானிய அரசாங்கம் சிறீலங்கா அரசாங்கத்தின் தமிழின படுகொலையை நிறுத்த அழுத்தம் கொடுக்கவேண்டும் என பிரித்தானிய தமிழ் மாணவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். நாங்கள் இனியும் மற்றவர்களை எதிர்பார்த்திராது எங்கள் இனத்தை உறவுகளை நாங்கள் காப்போம் என்ற உறுதியுடன் நாளை இந்த போராட்டத்தில் ஒன்றிணைவோம்.



இதுபோன்ற வரும் அடுத்த அடுத்த நாட்களில் வன்னி மக்களின் அவலத்தை பிரதிபலிக்கும் விதமாக ஒவ்வொரு நாளும் வித்தியாசமான போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என பிரித்தானிய தமிழ் மாணவர்கள் அறிவித்துள்ளனர்

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.