Friday, May 8, 2009

கண்டி பல்லேகல முகாம், அம்பேபுச முகாம்களில் 1000 ற்கு மேற்பட்டோர் தடுத்து வைத்து புனர்வாழ்வு அளிக்கப்படுவதாக தெரிவிப்பு

வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் பாதுகாப்புத் தரப்பினரின் கட்டுப்பாட்டுள் இருந்தவர்களில் வடிகட்டப்பட்ட இளைஞர்கள் மற்றும் 18 வயதுக்கு குறைந்தவர்கள் கண்டி பல்லேகல புனர்வாழ்வு முகாமிலும் அம்பேபுச முகாமிலும் புனர்வாழ்வுக்கு உட்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நேற்று இந்த முகாம்களிற்கு புளொட் தலைவர் சித்தார்த்தன் மற்றும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுகு எனப்படும் சிறீதரன் உள்ளிட்ட குழுவினர் விஜயம் செய்யதாக அவ்வமைப்புக்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல்லேகல முகாமில் 800 வரையிலான இளைஞர்களும், அம்பேபுச முகாமில் பெருமளவு பெண் பிள்ளைகள் உள்ளிட்ட 120 வரையிலான சிறுவர்களும் தடுத்து வைத்து புனர்வாழ்வு அளிக்கப்படுவதாக அங்கு சென்று திரும்பிய குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்களுக்கு கல்விகற்பிப்பதற்காக கிளிநொச்சியில் சரணடைந்து இராணுவத்தினருக்கு அண்மையில் பேட்டியளித்த ஆங்கில ஆசிரியை கற்பித்தலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டு புனர்வாழ்வு அளிக்கப்படுபவர்களின் பெயர்விபரங்கள் பெற்றோர்களுக்கு அறிவிக்கப்படாததுடன் எத்தனைபேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்தும் அரசாங்கம் உத்தியோகபூர்வ தகவல்கள் எதனையும் வெளியிடவில்லை.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.