Wednesday, May 13, 2009

பிரான்ஸிலும், லண்டனிலும் வழிபாட்டிடங்கள் மீது தாக்குதல்

பிரான்ஸிலும், லண்டனிலும் பெரும்பாலும் இலங்கையர்கள் வழிபாடு செலுத்தும் மேலும் இரண்டு வழிபாட்டிடங்கள் தாக்கப்பட்டுள்ளன.
கடந்த திங்களன்று இரவு பிரான்ஸின் பாரிஸ் பகுதியில், லாக்குரணோ என்னும் இடத்தில் உள்ள சிவன் கோயில் ஒன்று விசமிகளால் தாக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் குண்டு வீசி ஆலய கோபுரம் தாக்கப்பட்டதாகக் கூறுகின்ற ஆலயத்தின் தலைமைக் அர்ச்சகரான சுதன் குருக்கள், இந்த சம்பவம் தொடர்பாக சிங்கள இனத்தைச் சேர்ந்த நான்கு பேரை பொலிஸார் கைது செய்திருப்பதாகவும் கூறினார்.

அதேவேளை, லண்டனில் கிங்ஸ்பரி பகுதியில் இருக்கின்ற சிறி சதாதிஸ்ஸ சர்வதேச பௌத்த மையம் என்னும் வழிபாட்டிடம் இன்று அதிகாலை சிலரால் தாக்கப்பட்டிருக்கிறது.

தாக்குதலை நடத்தியவர்கள் கற்களை வீசி மையத்தின் யன்னல்கள் மற்றும் கதவுகளுக்கு சேதம் ஏற்படுத்தி தப்பிச் சென்றுவிட்டதாக அந்த வழிபாட்டிடத்தை சேர்ந்த பௌத்த மதகுருவான பிய்டஸி தேரோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருவதாகவும் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்றும் அவர் கூறினார்

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.