புலிகளை அழிப்பதற்கான இறுதிப்போர் முடிவடையும் கட்டத்தை நெருங்கி விட்டதாக அரசாங்கத் தரப்பில் கூறப்படுகிறது.
முள்ளிவாய்க்கால் பகுதிக்குள் நடக்கின்ற சண்டைகளில் புலிகள், பெருமளவில் கரும்புலிகளைப் பயன்படுத்தி தற்கொலைக்குண்டுத் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 15இற்கும் மேற்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களைப் புலிகள் மேற்கொண்டதாக இராணுவத் தரப்பு கூறுகிறது.
இன்று காலை 10 மணியளவில் வெடிமருந்து நிரப்பிய பஸ் ஒன்று கரையமுள்ளிவாய்க்கால் இராணுவ நிலைகளை நோக்கி வேகமாக வந்தபோது இராணுவத்தினரால் தாக்கி அழிக்கப்பட்டதாக பாதுகாப்பு வட்டாரங்கள் கூறின.
No comments:
Post a Comment