இலங்கையில் போர் நிறுத்தம் வந்துவிட்டது என்று திமுகவும், காங்கிரஸ்சும் அறிவித்துக் கொண்டுள்ளார்கள். சென்னை வந்த பிரதமரும் போர் நிறுத்த நடவடிக்கைக்கு சிங்கள அரசு சம்மதித்து விட்டது என்றார்.
ஆனால் ஈழத்தில் சனிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை நடந்த குண்டு வீச்சில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்கள் பலியாகியிருப்பதாக இப்போது தகவல் கிடைத்திருக்கிறது.
இப்படி நாள் தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் சண்டையில் பலியாகி வருகிறார்கள். இச்சண்டையை நிறுத்தாமல் தப்பி வருகிற மக்களுக்கு நிவாரணம் வழங்க போகிறோம் என்று இந்தியரசு சொல்லிவருகிறது. அதையே முதலமைச்சரும் சொல்லி வருகிறார்.
இலங்கை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு தனி ஈழம் அமைவது மட்டுமே என்பது அதிமுக கூட்டணியின் உறுதியான நிலைப்பாடு. இதற்காக இராணுவத்தை கூட அனுப்ப தயங்கமாட்டோம் என்று ஜெயலலிதா அறிவித்திருக்கிறார்.
இது எப்படி சாத்தியம்? பன்னாட்டு சட்டங்கள் குறுக்கிடாதா? ஏன்றெல்லாம் இங்குள்ளவர்கள் கேட்டார்கள், பிரதமரும் இதையே கேட்டிருக்றார்.1971 ஆம் ஆண்டு வங்கதேசத்தில் இந்திய இராணுவத்தை அனுப்பி இந்திராகாந்தி விடுதலை வாங்கித்தந்தார்.
பாகிஸ்தானுக்குள் இந்திய இராணுவத்தை அனுப்பும்போது பாகிஸ்தான் நிர்வாகத்தால் வங்க மக்கள் இனப்படுகொலை செய்யப்படுகிறார்கள் அதை தடுக்கிறோம் என்று குறிப்பிட்டார்.
அப்போது பன்னாட்டு சட்டம் குறிக்கிடவில்லை. அப்போது விட இப்போது இலங்கையில் நிலைமை மோசம். சிறுபான்மை மக்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தினால், படுகொலை செய்தால் மற்ற நாடுகள் தலையிடலாம் தேவைப்பட்டால் இராணுவத்தை அனுப்பலாம் என்று 8 ஆண்டுகளுக்கு முன்பு ஐக்கிய நாடுகள் அவை சட்டம் வகுத்துக்கொடுத்திருக்கிறது.
இந்த சட்டத்தின் படி கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்ற அடக்கு முறைக்கு எதிராகவும், இனவெறிக்கு எதிராகவும், மதவெறிக்கு எதிராகவும் அமெரிக்கா தலைமையிலான நேசநாடுகளின் படையினர் படையெடுத்து செச்சினியா போஸ்னியா போன்ற பல புதிய நாடுகள் உருவாகியிருக்கின்றன.
அப்போதுயெல்லாம் சர்வதேச சட்டங்கள் குறுக்கிடவில்லை? ஈராக்கிற்கு, ஆப்கானிஸ்தானிற்க்கு அமெரிக்க படைகள் அனுப்பபட்டது எப்படி? இலங்கைக்கு இராணுவத்தை அனுப்பி தனி ஈழத்தை அமைப்பது சாத்தியமானது தான். கருணாநிதி சொல்வார் செய்ய மாட்டார். ஜெயலலிதா செல்வார் அதையே செய்து முடிப்பார் என்றார்.
No comments:
Post a Comment