
இன்று அதிகாலை முல்லைத்தீவு கடற்பரப்பில் தாக்குதலொன்று இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இத்தாக்குதலின்போது படையினரின் சுப்பர்டோரா படகு ஒன்று மூழ்கடிக்கப்பட்டுள்ளதாகவும் சுமார் 25 க்கும் மேற்பட்ட கடற்படையினர் கொல்லப்பட்டிருக்கலாமென்றும் மூன்று படகுகளில் சென்ற கரும்புலிகள் இத்தாக்குதலை நடத்தியதாகவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக விடுதலைப் புலிகளிடமிருந்து உத்தியோக பூர்வ செய்திகள் எதுவும் இன்னும் வரவில்லை. இருப்பினும் ICRC கப்பலில் இருந்து நேரடியாக இச் சம்பவத்தை பார்த்திருக்கிறார். அவர் வாயிலாக பிறிதொருவர் வவுனியாவில் இருந்து அதிர்வின் செய்திச் சேவைக்கு இச் செய்தியை தெரிவித்துள்ளார்
No comments:
Post a Comment