Sunday, May 3, 2009

கடத்தப்பட்ட சிறுமி சடலமாக மீட்பு


மட்டக்களப்பில் கடந்த செவ்வாய்க்கிழமை கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலய பாடசாலை வாயிலில் வைத்து கடத்திச்செல்லப்பட்ட மூன்றாம் ஆண்டு மாணவியான சதீஸ்குமார் தினுஷிகா (வயது8) நேற்றுகாலை பாடசாலையிலிருந்து 300 மீற்றர் தூரத்திலுள்ள வளவொன்றினுள் பாழடைந்த கிணற்றுக்குள்ளிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவரது கடத்தல் தொடர்பான செய்திகள் மர்மமாகவே இருந்தாலும். எமது செய்திச்சேவைக்கு பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.


உடற்பயிற்சி ஆசிரியரான இவரது தந்தையார் சதீஸ்குமார் காந்திராஜா 2002 ஆம் ஆண்டு இராணுவ புலனாய்வுப் பிரிவினரால் கடத்தப்பட்டிருந்தார். தற்பொழுது பிள்ளையானின் வலதுகையான சீலன் அப்பொழுது இராணுவப் புலனாய்வுப்பிரிவினருடன் இணைந்து செயற்பட்டுக் கொண்டிருந்தார். இவரே இச்சிறுமியின் தந்தையின் கடத்தலில் முக்கிய பங்கு வகித்திருந்தார். பின்னர் கருணாகுழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டு சீலனால் இவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்தநிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு கடத்தப்பட்ட சிறுமி தினுஷிகா நேற்றுக் காலை சடலமா மீட்கப்பட்டார். இவரது கண்கள் இரண்டும் தோண்டப்பட்டிருந்ததாகவும், அடிவயிற்றில் கீறல் போன்ற அடையாளம் காணப்பட்டதாகவும் நேரில்பார்த்த எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். சிலவேளைகளில் இவரது கண்களும், சிறுநீரகமும் அகற்றப்பட்டிருக்க வாய்ப்புக்களும் உள்ளன. எனினும் இச்சிறுமி கடத்தப்பட்டவுடன் 30 இலட்சம் ரூபா கப்பமாகக் கேட்கப்பட்டதாகவும். இவரது வீட்டார் அதற்குச் சம்மதம் தெரிவித்து நேற்றுக் காலை அப்பணத்தை கொடுப்பதற்குறிய ஒழுங்குகளை மேற்கொண்டிருந்தவேளையிலே இவர் கொலைசெய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

எனினும் கடந்த செவ்வாய்க்கிழமை இவர் கடத்தப்படுவதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்பு கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலய பாடசாலை வாயிலில் சந்தேகத்திற்கிடமான இருவர் நடமாடியதாகவும் அப்பொழுது அவ்வழியால் வந்த பொலிஸாரின் ஜீப்பிற்குள் இருந்த ஒருவருக்கு, இருவரும் கைகாட்டிவிட்டு நின்றதாகவும் அப்பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் தகவல் தந்துள்ளார். இச்சிறுமியின் கொலையில் முக்கிய கொலையாளியாக இராணுவ புலனாய்வுப்பிரிவைச் சேர்ந்த கந்தசாமி ரதீஸ்குமார் சம்பந்தப்பட்டிருப்பதாக எமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன.

இதனை இச்சிறுமியின் குடும்பத்தவர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர். இச்சிறுமியின் தந்தை கடத்தப்பட்டபின்னர் அடிக்கடி விசாரணைக்கென இவர் இவர்களுடைய வீட்டிற்கு வந்து சென்றதாக தகவலொன்று தெரிவிக்கின்றது. கடந்தவருடம் இச்சிறுமியில் வீட்டிற்கு அருகிலுள்ள வீட்டில் இருந்த தபாலதிபாரான சுஜி என்பவரின் கடத்தலிலும் ரதீஸ்குமாரும், சீலனும் சம்பந்தப்பட்டிருந்தனர். இவர் முன்னர் இராணுவப்புலனாய்வுப்பிரிவின் முக்கியஸ்தர்களான புளொட்மோகனுடனும், நிஷாம் முத்தலிப்புடனும் சேர்ந்து இயங்கியவர். மட்டக்களப்பில் அதிகளாவான இளைஞர்கள் காணாமல் போனதுக்கும், படுகொலை செய்யப்பட்டமைக்கும் இவர்களும் காரணமாக இருந்தனர்.

புளொட்மோகனும், நிஷாம் முத்தலிப்பும் தற்பொழுது உயிருடன் இல்லாததனால் ரதீஸ்குமார் இராணுவ புலனாய்வுப்பிரிவில் முக்கிய பதவியொன்றில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் இவர் கருணாகுழு முக்கியஸ்தர்களுடனும், பிள்ளையான்குழு முக்கியஸ்தர்களுடனும் மிக நெருக்கமாக உறவுகளைப் பேணிவருகின்றார். புலனாய்வுப்பிரிவில் வேலைசெய்கின்ற சில இளைஞர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்காகவே பணம் தமக்கு தேவைப்படுவதாக தொலைபேசிமூலம் இவர் கேட்டதாக சிறுமியின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

கடைகளைப் பூட்டினால் கொலைகள் தொடரும்!! இராணுவ புலனாய்வுப் பிரிவினர் எச்சரிக்கை!!
மட்டக்களப்பில் கடத்தப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட 8 வயதான சதீஸ்குமார் தினுஷிகாவின் கொலையைக் கண்டித்து மட்டக்களப்பு மக்கள் மூன்றுநாளைக்கு ஹர்த்தாலொன்றை ஏற்பாடு செய்துள்ளனர். இன்று முதல் மூன்றுநாளைக்கு ஹர்த்தால் அனுஷ்டிப்பதற்கு முடிவாகியிருந்தவேளை இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவினரால் இவர்கள் மிரட்டப்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் சிலர் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை 6 மணியளவில் மட்டக்களப்பை கதிகலக்கிவரும் மோட்டார் சைக்கிள் குறூப்பான அப்பாச்சி குறூப் ரோந்து வந்ததாகவும் இவர்களுடன் இராணுவ புலனாய்வுப்பிரிவினரின் முகாமிலிருந்து பள்சர் மோட்டார்சைக்கிளொன்றில் வந்த இருவர் கடைகளுக்குள்ளிருந்த சில வர்த்தகர்களை வெளியே அழைத்து யாராவது கடைகளை மூடினால் இந்தச் சிறுமிக்கு நடந்ததைப்போன்று தொடர்ந்து நடக்கும் என தமிழில் எச்சரித்துவிட்டுச் சென்றுள்ளனர்.

மட்டக்கிளப்பில் தொடரும் இந்த மர்மக்கொலைகள் எப்போது நிறுத்தப்படும், அங்குள்ள மக்கள் ஒரு அச்சம் கலந்த சூழலில் வாழ்கை நடத்துகின்றனர். சர்வதேசமோ அங்கு ஜனநாயம் திரும்பி இருப்பதாக கூறிவருகிறது.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.