யேர்மனியில் பட்டினிப் போராட்டத்தை முன்னெடுத்துவரும் கிரி,ராகுல் ஆகியோருக்கு ஆதரவாக யேர்மனித் தலைநகர் பெர்லின் நகரில் அடையாள உண்ணாவிரதம் ஒன்று பேர்லின் வாழ் தமிழ்மக்களாலும் பேர்லின் தமிழ்அமைப்புக்களாலும் நேற்று வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி தொடக்கம் பிற்பகல் 5.00 மணிவரை அமெரிக்க, பிரான்ஸ் மற்றும் பிரித்தானிய நாடுகளின் தூதரகத்தின் முன்றலில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா இனவாதஅரசின் தமிழ்மக்களுக்கெதிரான படுகொலையைத் தடுப்பதற்காக உடனடிப் போர்நிறுத்தத்தை ஸ்ரீலங்காஅரசு மேற்கொள்ள வேண்டுமென சர்வதேச நாடுகள் வற்புறுத்தவேண்டுமென்பதற்காக தயாரிக்கப்பட்ட மகஜார் ஒன்றில் சகல தமிழ்மக்களிடமும், ஜேர்மன் வாழ் மக்களிடமும், பொதுஅமைப்புக்களிடமும்; கையெழுத்துப்பெறும் நடவடிக்கையும் நடைபெற்றது. அத்துடன் ஈழத்தமிழர்களின் தற்காலிக கொடூரமான நிலை காணொளிகள் மூலமாகவும் கண்காட்சி மூலமாகவும் பொதுமக்களுக்கு எடுத்துக்காட்டப்பட்டது.
No comments:
Post a Comment