Sunday, May 10, 2009

தமிழினப் படுகொலையை கண்டித்து சர்வதேச நாடுகளில் மக்களின் எழுச்சிப் போராட்டங்கள்

வன்னியில் நடைபெற்றுவரும் தமிழினப்படுகொலையைக் கண்டித்தும் சர்வதேச நாடுகளின் தலையீட்டை வலியுறுத்தியும் புலம்பெயர் நாடுகளான பிரான்ஸ், அவுஸ்திரேலியா, பிரித்தானியா,ஜேர்மனி போன்ற நாடுகளில் உள்ள தமிழ்மக்களின் மாபெரும் எழுச்சிப் போராட்ங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.
பிரான்சில் மக்கள் பெரும் எழுச்சி.

சிறிலங்கா அரசின் தமிழினப்படுகொலை மிகவும் உச்சமடைந்துள்ள நிலையில் சனிக்கிழமையன்று இரவு, கொடிய ஆயுதங்களைப் பாவித்து 3000க் கணக்கான உயிர்களை நரபலி எடுத்துள்ளதுடன் பலஆயிரக்கான உறவுகளைப் படுகாயங்களுக்கும் உள்ளாக்கியுள்ளது சிங்களம்.

இந்த செய்தியை அறிந்த மக்கள் தாமாகவே எழுச்சி கொண்டு பாரீஸ் நகர வீதிகளை முற்றுகையிட்டு போராட்டங்களை நடாத்தி வருகின்றனர். அத்துடன் பிரஞ்சு அரசிடமிருந்து நல்ல முடிவைப் பெறும் வரை இந்தப் போராட்டம் தொடரும் என போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர். அதே நேரம் பெருமளவிலான மக்கள் இந்தத் தொடர் போராட்டத்தில் பங்கேற்க வேண்டுமெனவும் அழைப்புவிடுத்துள்ளனர்.

நாசகார குண்டுகளைத் தமிழ் மக்கள் மிது வீசும் கொடிய சிங்கள அரசின் கோரமுகத்தை கிழித்தெறிய வேண்டும். பிரான்ஸ் வாழ் தமிழ் மக்கள் அனைவரையும் திரண்டு வருமாறு அழைக்கிறார்கள் ஏற்பாட்டாளர்கள்.

பிரான்சில் 12ம் திகதி செவ்வாய்க்கிழமை 'அடங்காப்பற்று" மாபெரும் பேரணி.

பிரான்சில் தொடர்ந்து ஒரு மாத்திற்கு மேலாக உண்ணா நிலைப் போராட்டத்தை மேற்கொண்டு வரும் இளைஞர்களின் உடல் நிலை மிகவும் மோசமடைந்துள்ள நிலையில் இவர்களது போராட்டத்திற்கு வலுச்சேர்க்கவும், தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கக்கோரியும் 12ம் திகதி செவ்வாய்க்கிழமை 'அடங்காப்பற்று" மாபெரும் பேரணி மாலை 15.00 மணிக்கு பாரீஸ் நகரத்திலுள்ள ழிநசய பகுதியில் இருந்;து ஆரம்பமாகும் பேரணி பிரதானசாலைகள் ஊடாக நகர்ந்து, தற்போது உண்ணா நிலைப்போராட்டம் நடைபெற்றுவரும் சுதந்திர சதுக்கம் நோக்கி (place de la République) பேரணியாக நடைபெறவுள்ளது.

01. உணவையும் மருந்துகளையும் ஆயுதமாக பயன்படுத்தும் சிங்கள அரசையும் அதற்கு துணைபோகும் ஏனைய நாடுகளும் நடாத்தும் கொடிய தமிழின அழிப்பை உடனே தடுத்து நிறுத்துங்கள்.

02. மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களை செய்துவரும் சிறீலங்கா அரசையும் அதற்குதுணை நிற்கும் நாடுகளையும் தமிழர் தாயகத்தில் இருந்து வெளியேற்றுங்கள்.

03. உடனடியான நிரந்தர போர்நிறுத்தத்தை ஏற்படுத்துங்கள்.

04. அவசர மனிதநேய உதவிகளை வழங்குங்கள.;

போன்ற கோரிக்கைகளை முன் நிறுத்தி அடங்காப்பற்றுப்பேரணி நடைபெறவுள்ளது. பிரான்ஸ் மக்களிடமும், அரசிடமும் நீதி கேட்டு அடங்காப்பற்றுப்பேரணி நடைபெறவுள்ள வேளையில், செவ்வாய்க்கிழமையன்று அடையாள வேலை நிறுத்தம் ஒன்று தமிழ் மக்களால் மேற்கொள்ளப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து தமிழ் மக்களையும் அழைக்கிறார்கள் ஏற்பாட்டாளர்கள்.

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் இருந்து கன்பரா நோக்கி ஊர்திகளில் கவனயீர்ப்பு போராட்டம்

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரிலிருந்து ஊர்தி ஊர்வலம் தலைநகர் கன்பராவை நோக்கி நாளை செவ்வாய்க்கிழமை காலை 10 மணி தொடக்கம் மாலை 4மணி வரை நடைபெறும் கவனயீர்ப்பு நிகழ்வில் கலந்து கொள்ளவும், எமது தமிழர் உரிமையை நிலைநாட்டுவதற்காக இன்று இரவு பயணிக்கின்றது.

அன்பார்ந்த எம் தமிழ் உறவுகளே!

இந்த உரிமைப் போராட்டத்தில் கலந்துகொண்டு தாயகத்தில் சிங்கள அரசின் கொலைக்களத்தில் சிக்கி இருக்கும் எம் மக்களின் உயிர்களைக் காப்பாற்றவும் எமது உரிமையை நிலைநாட்டவும் அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன் அணிதிரண்டு வாரீர்.

ஊர்திகளில் இணைக்கக்கூடிய அவுஸ்திரேலிய மற்றும் தமிழீழத் தேசியக் கொடிகளை பெற்றுக்கொள்ளவும் உங்கள் ஊர்திகளின் பதிவு இலக்கங்களை கொடுக்கவும் பின்வரும் தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளுங்கள்:

கௌரிகரன்: 0402 078 430

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!.

தொடர்சியான, பிரமாண்டமான போராட்டத்திற்கு பிரித்தானியத் தமிழர்களுக்கு அவசர அழைப்பு.

நேற்று அதிகாலை முதல் சிங்களப் படைகளால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் அகோரத்தாக்குதலில், 3000 ற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுவிட்ட நிலையில் இன்னமும் இராணுவத்தின் கோரத்தாண்டவம் தொடர்கிறது.

இறந்தவர்களையோ, காயமடைந்தவர்களையோ மீட்க முடியாமல் ஓலமிட்டுத் தவிக்கிறார்கள் வன்னி மக்கள். ஒரேயடியாக தமிழர்களை கொன்றொழிக்க ஆரம்பித்துவிட்ட சிங்களப் படைகளை தடுத்து நிறுத்த உலகத் தமிழர்கள் கிளர்ந்தெழுந்து விட்ட நிலையில், பிரித்தானியா வாழ் அனைத்து தமிழர்களும் 11-05-09 திங்கள் காலை 6:00 மணி முதல் மூன்று நாட்களுக்கு தொடர்ச்சியாக, இதுவரை காணாத மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானித்திருக்கிறார்கள்.

வன்னியின் அவலம் கண்டு கண்ணீர் விடுவதில் இனி எந்தப் பிரயோசனமும் கிடைக்கப் போவதில்லை. எம்முடைய போராட்டம் வலுவாக வேண்டும். எம் மக்களைக் காக்க சர்வதேசத்தின் கழுத்தைப் பிடிக்க வேண்டிய கடைசித் தருணமிது. நேரம் காலம் பார்க்க இனி அவகாசம் இல்லை. 24 மணித்தியாலங்களும் பாராளுமன்ற சதுக்கம் தமிழர்களால் நிரம்பி வழியவேண்டும் என அனைத்துத் தமிழர்களாலும் எதிர்பார்க்கப் படுகிறது.

குழந்தைகளுடன் வருபவர்கள், அவர்களுக்குத் தேவையான உணவு, தண்ணீர் மற்றும் போர்வைகளுடன் வருவது அவரவர்களின் கடமை என்பதையும் அனைவரும் கருத்தில் கொள்க.

தன்மானம் கொண்டெழுவோம், ஒன்றாயெழுவோம்.

யேர்மனியில் எட்டாவது நாளைத்தாண்டிய பட்டினிப்போராட்டம்.

யேர்மனியில் கிரி மற்றும் ராகுல் ஆகிய இளையோர்களால் முன்னெடுக்கப்படும் பட்டினிப்போராட்டம் இன்று எட்டாவது நாளை எட்டியுள்ளது. இன்று காலை பெருமளவிலான தமிழாலய மாணவர்கள் உண்ணாவிரதப் பந்தலுக்கு வருகைதந்து கிரி மற்றும் ராகுலுடன் உரையாடிச் சென்றனர். இன்று ஸ்ரீலங்கா அரசாங்கம் வன்னிப்பகுதியில் மேற்கொண்ட இன அழிப்புப்பற்றி சிறுவர்களுக்கு ராகுல் விளக்கமளித்தார்.

அதனைத் தொடர்ந்து பெருமளவான மக்கள் உண்ணாநோன்புப் பந்தலுக்கு முன் கூடி நின்று தமிழின அழிப்பிற்கெதிராகக் குரல் கொடுத்தவண்ணமிருந்தனர். மனிதநேய ஆர்வலர்கள், பிறநாட்டவர்கள் எனப்பலர் உண்ணாநோன்பினை மேற்கொள்ளும் இளையோர்களைச் சந்தித்து உரையாடினார்கள்.

கூடியிருந்த மக்கள் வெய்யிலின் வெம்மையையும் பொருட்படுத்தாது, தமிழின அழிப்பை வெளிக்கொணரும் விதமாக இரத்தக்கறை படிந்தது போன்று சாயம் பூசப்பட்ட உடைகளை அணிந்து தமது உணர்வுகளை வெளிப்படுத்தினர்.

சமவேளையில், டுசில்டொர்ப் புதையிரதநிலையத்தின் முன் திடீரெனக் கூடிய இளையோர் குழுவொன்று, தமிழின அழிப்பை வெளிக்கொணரும் முகமாக வீதி நாடகமொன்றை நடாத்தினர். இரத்தக்காயங்கள் கொண்டவர்கள் போல சிலர் ஓடிச்சென்று புகையிரதநிலைய வாசலை அண்மித்தபோது, பதட்டமடைந்த காவல்துறையினர் அவர்களை சுற்றிவளைத்துக் கொண்டனர்.

தொடர்ந்து அங்கே நோயாளர் காவுவண்டியும் கலகமடக்கும் காவல்துறையினரும் குவிக்கப்பட்ட போதும், இளையோர்களின் வேண்டுகோளுக்கிணங்க தொடர்ந்து ஒரு மணிநேரத்திற்கு அவ்விடத்தில் வீதிநாடகம் நடாத்தக் காவல்துறையினரால் அனுமதி வழங்கப்பட்டது. இவ்வீதிநாடகத்தை பெருமளவிலான யேர்மனியமக்கள் பார்வையிட்டதுடன் இனஅழிப்புச் செய்திகள் அடங்கிய துண்டுப்பிரசுரங்களைக் கேட்டுப்பெற்றுக்கொண்டனர்.

மாலை 5.00 மணியளவில் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு மக்கள் மனிதச்சங்கிலிப் போராட்டம் நடாத்தினர். அதனைத்தொடர்ந்து வன்னிமண்ணில் போரினால் உயிர்நீத்த மக்களுக்காக மெழுகுதிரிச் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

உண்ணாநோன்பினை மேற்கொள்ளும் இளையோர்களைச் சந்ததிக்க வந்திருந்த அருட்தந்தை இம்மானுவேல் அவர்கள் அஞ்சலியைத் தொடர்ந்து யேர்மனிய மொழியிலும் டொச் மொழியிலும் உரையாற்றினார். யேர்மனியில் உள்ள அனைத்து மதகுருமார்களையும் ஒன்றிணைந்து வந்து இந்த உண்ணாநோன்பிற்கு பலம் சேர்க்குமாறு அவர்களுக்குத் தான் அறிக்கை ஒன்றை அனுப்பிவைத்திருப்பதாகவும், யேர்மனி வாழ் அனைத்து இளையோர்களையும் இங்குவந்து அணிதிரளவேண்டுமென்றும் தெரிவித்த அவர், வன்னியில் வாடும் உறவுகளுக்காகத் தான் பிரார்த்தனை செய்வதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து உண்ணாவிரதம் மேற்கொள்ளும் சகோதரன் ராகுல் உரையாற்றினார். முடிவில் இளையோரால் தமிழின அழிப்பினை மையமாகக்கொண்ட பாடல்கள் இசைக்கப்பட்டன. இன்றும் பல உறவுகள் சுழற்சி முறையிலான உண்ணாநோன்பினை மேற்கொண்டனர்.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.