Friday, May 15, 2009

இலங்கையில் பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கு ஐ.நா மன்ற மனித உரிமை ஆணையர் ஆதரவு

இலங்கை அரசு இறுதிக்கட்ட போரை நடத்திக் கொண்டிருப்பதாக கூறும் நிலையில், அங்கு பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக , சர்வதேச விசாரணை ஒன்றை தான் ஆதரிப்பதாக ஐ.நா மன்ற மனித உரிமை ஆணையர் நவநீதம்பிள்ளை கூறுகிறார்.
இலங்கையில் நடந்த சம்பவங்களுக்கு பொறுப்பு சுமத்தப்படவேண்டும் , தண்டனை இல்லாத நிலை ஏற்படக்கூடாது என்று ஐ.நா மன்ற மனித உரிமை ஆணையருக்காகப் பேசவல்ல ஒருவர் கூறினார்.

இலங்கை, சாத்தியக்கூறான போர்க்குற்றங்களுக்காக விசாரணையை எதிர்கொள்ள நேரிடலாம் என்று பிரிட்டனும் கூறியிருந்தது. இலங்கை அரசு , பொதுமக்கள் வாழும் பகுதிகளில் ஷெல் வீச்சுக்களை நடத்தியதாகவும், விடுதலைப்புலிகள் பொதுமக்களை மனிதக்கேடயங்களாகப் பிடித்து வைத்ததாகவும் , தப்பியோடும் பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் குற்றம் சாட்டப்படுகிறார்கள்.

நவநீதம் பிள்ளையின் இந்த கருத்து குறித்து இலங்கை வெளியுறவுத்துறை செயலர் டாக்டர் பாலித கோஹன அவர்களிடம் கேட்டபோது,

மிகவும் மூர்க்கமான பயங்கரவாத இயக்கங்களில் ஒன்று தோற்கடிக்கப்பட்டுவரும் இந்தத் தருணத்தில், விடுதலைப்புலிகள் இயக்கத்தால் மனிதக் கேடயங்களாகப் பிடித்து வைக்கப்படிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மீட்கப்பட்டுவரும் இந்தத் தருணத்தில், இது போன்று பேசுவது விசித்திரமாக இருப்பதாகக் குறிப்பிட்டார்.

மேலும் அவர் கூறுகையில்,

அரசாங்கம் இப்போது, ஒரு ஈடு இணை சொல்லமுடியாத ஒரு முயற்சியில், அவர்களைப் பாதுகாத்துக்கொண்டிருக்கிறது, அவர்களுக்கு உதவி செய்துகொண்டிருக்கிறது.

இப்போது 196000 இடம்பெயர்ந்தோர் இருக்கிறார்கள் அரசு, அவர்களின் நலன்களைக் கவனித்துக்கொண்டிருக்கிறது. அவர்களை, அரசின் சொந்த வளங்களிலிருந்தே கவனித்துக்கொண்டிருக்கிறது,

வெளிநாட்டு உதவி ஏதுமின்றி. இந்த தருணத்தில் சர்வதேச சட்டங்கள் மீறப்படுகின்றன என்றெல்லாம் கூறுவது விநோதமானது என்றார். பாலித ஹோகன

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.