Friday, May 15, 2009

சர்வதேசம் தற்போதும் செயற்படாவிட்டால், அது அதன் இயலாமையையே காட்டும்: தமிழீழ விடுதலைப்புலிகள் சர்வதேச பொறுப்பாளர்

சர்வதேசம் தற்போது செயற்படாவிட்டால், அது பாரிய மனித அழிவை சர்வதேசத்தினால் தடுக்கமுடியாத தோல்வியடைந்த வரலாற்றை காணவேண்டியிருக்கும் என தமிழீழ விடுலைப்புலிகள் எச்சரித்துள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் கடமை அப்பாவிகளை காப்பாற்றுவது. எனினும் வன்னியில், இனப்படுகொலை இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக தமிழீழ விடுதலைப்புலிகளின் சர்வதேச தொடர்பு பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

சர்வதேசம் இந்த இனப்படுகொலையை தடுக்காவிட்டால், அது இந்த இனப்படுகொலைகளுக்கு சர்வதேசம் துணை போனதாகவே அமையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மனிதநேயத்திற்கு கடந்த இரண்டு நாட்கள் இருளடைந்த நாட்களாக அமைந்திருந்தன. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அமைச்சர்கள் எச்சரித்திருந்த போதும், இலங்கைப்படையினர் பாதுகாப்பு வலயங்களின் மீது பாரிய தாக்குதல்களை நடத்தியுள்ளனர்

இவ்வாறான தாக்குதல்களினால், கடந்த 3 மாதங்களில் மாத்திரம் ஏழாயிரம் பொதுமக்கள் பலியாகியுள்ளனர். கடந்த 2 நாட்களில் மாத்திரம் 1700 பேர் பலியாகியுள்ளனர்.

“இந்த உலகில் வாழும் தமிழர்கள், சர்வதேசத்திடம், கேட்பதெல்லாம், வன்னியில் உள்ள எமது உற்றார் உறவினர்களை காப்பாற்றுங்கள்” என்பதாகும். கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் வன்னியில் பாரிய எறிகணை தாக்குதல்கள் பாதுகாப்பு வலயங்களுக்குள் இடம்பெற்றுள்ளன.

இதில் எத்தனை பேர் உயிர்வாழ்கிறார்கள் என்பது கூட தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த உலகம் முழுவதும் இன்னும் தமிழர்களை காப்பாற்றும் நடவடிக்கையில் இறங்கவில்லை.

இந்தநிலையில், சர்வதேசத்திடம், வன்னித்தமிழர்களை காப்பாற்றுமாறு கோரிக்கை விடுப்பதாக பத்மநாதன் கேட்டுள்ளார். அதற்கான தலையீடுகளை மேற்கொள்ளுமாறு தாம் கோருதாகவும் பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.