தளராத உறுதியுடன் பட்டினிப்போராட்டத்தின் பதினைந்தாவது நாளை கிரி மற்றும் ராகுல் ஆகியோர் கடந்து, தொடர்ந்தும் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.
நேற்றுக் காலை தொடக்கம் மக்கள் திரண்டவண்ணமிருந்தபோதும் , வன்னியின் அவலநிலை தொடர்பான செய்திகளையறிந்து மிகவும் விசனப்பட்டவண்ணம் இருந்தபோதும் தளபதி சூசை அவர்களின் உரையைக்கேட்டபின் உறுதியுடன் கவனயீர்ப்பில் ஈடுபடத்தொடங்கினர்.மழைகொட்டியபடி இருந்தபோதும் மக்கள் நனைந்தபடியே குரல்கொடுத்தனர். காலை தொடக்கம் பட்டினிப்போராடத்தினை மேற்கொள்ளும் கிரி, ராகுல் ஆகியோரை பல பிறநாட்டவர்கள், அரசியற்கட்சிப்பிரமுகர்கள் ஆகியோர் சந்தித்து உரையாடினர். தமது போராட்டத்தின் முக்கிய குறிக்கோள்களை அவர்களுக்கு எடுத்துவிளக்கிய கிரி மற்றும் ராகுல் ஆகியோர் எமது மண்ணில் நடந்தேறியிருக்கும் அவலங்கள் பற்றியும் அவர்களுக்கு எடுத்துரைத்தனர்.
நாம் எமது மக்களுக்கான நிம்மதிவாழ்வை மட்டுமே தேடிநிற்கின்றோம். எமது மக்களுக்காக நாம் போராடிக்கொண்டிருக்கின்றோம். சர்வதேச சமூகம் உடனடியாகத் தலையீடு செய்து அங்கே காயங்களுடன், உணவேதுமின்றி தவித்துக்கொண்டிருக்கும் பொதுமக்களைக் காப்பாற்றுவதற்கு உடனடியான நடவடிக்கை எடுக்கவேண்டுமென கேட்டுக்கொள்கிறோம் எனத் தெரிவித்தனர்.
மாலை 16.00 மணியளவில் பட்டினிப்போராட்டம் மேற்கொள்ளும் இளையோர்களை சந்திப்பதற்கென CDU கட்சியின் Hessen மாநிலப் பொறுப்பாளர் Philip stompfe அவர்கள் வருகைதந்தார். அவர் மக்கள் முன் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது, இலங்கையில் நடைபெறும் இனஅழிப்புப்பற்றி எப்பொழுதோ தான் அறிந்துவிட்டதாகவும், யேர்மனிய அரசாங்கம், ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் மீது அழுத்தத்தைப் பிரயோகித்து தமிழ்மக்களுக்கான சுயநிர்ணய உரிமையைப் பெற்றுக்கொடுக்க வேண்டுமென்றும் தெரிவித்தார்.
தமிழ்மக்களாகிய நாம் இப்போராட்டத்தை மிகவும் தாமதமாகவே ஆரம்பித்திருப்பது மிகவும் வேதனைக்குரியவிடயம் எனக்கூறிய அவர், தம்மால் முடிந்தவரையில் தமிழர்களது உரிமைக்காகப் போராடத் தமது கட்சி உறுதிபூண்டிருப்பதாகவும் தெரிவித்தார். திடலில் கூடியிருந்த மக்கள்சிலர் அவரிடம் எமதுஇனப்பிரச்சனையில் கட்சியின் பங்குகுறித்த விடயங்கள் பற்றியும், தமிழ்மக்கள் சார்பாக கட்சியின் எதிர்காலத்திட்டங்கள் பற்றியும் கேட்டறிந்தனர்.
மாலை 17.oo மணியளவில் அருட்தந்தை இம்மானுவேல் அவர்கள் பட்டினிப்போராட்டப் பந்தலுக்கு வருகைதந்து கிரி, ராகுல் ஆகியோருடன் உரையாடினார். தொடர்ந்து மக்கள் முன் உரையாற்றிய அவர், எமது சளைக்காத போராட்டம் கண்டு உலகம் அதிசயிப்பதாகவும், இளையவர்கள் சிறிதும் சோர்ந்துபோகாது சொற்கோட்டொலிகளை எழுப்பிக்கவனயீர்ப்பில் ஈடுபடுவது கண்டுதாம் பெருமையடைவதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்துமக்கள் திரண்டு சங்கிலிப்போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத்தொடர்ந்து அகவணக்கத்துடன் கூடிய, வன்னிமண்ணின் அவலம் காரணமாக உயிர்நீத்த மக்களுக்காக சுடர்வணக்கம் செய்யப்பட்டது
No comments:
Post a Comment