இந்தியாவின் விசேட தூதுவர்கள் இருவர் இன்று இலங்கை வரவிருப்பதாக அரச இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்திய வெளிவிவகார செயலர் சிவ்சங்கர் மேனன், தேசிய பாதுகாப்பு ஆலேசகர் எம் கே நாராயணன் ஆகியோரே இன்று இலங்கை வரவுள்ளனர்.
அவர்கள் வடக்கின் நிலவரங்கள் குறித்து ஆராயவிருப்பதாக தெரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அவர்கள் இலங்கையில் இருக்கும் காலவேளையில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பினை நடத்துவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கையில் மேற்கொள்ளப்படும் நிவாரணப் பணிகளை கண்காணிப்பதற்காக இந்தியா சார்பில் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் விரைவில் அனுப்பி வைக்கப்படுவார் என, இந்திய வெளியுறவுதுறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையில் மோதல்கள் நிறைவடைந்துள்ள நிலையில் அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரிதமாக நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் இந்திய வெளியுறவுதுறை அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு;ள்ளது.
எனவே, எந்த வகையில் நிவாரணப் பணிகளை மேற்கொள்வது என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக விரைவில் இந்தியா சார்பில் சிரேஷ்ட அதிகாரி இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா சார்பில் 500 கோடி ரூபாய் பெறுமதியான நிவாரணப்பொருட்களை வழங்குவது குறித்தும் திட்டமிடப்பட்டுள்ளது.
நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்கு தேவையான அனைத்து உதவிகளும் இந்தியா சார்பில் இலங்கைக்கு அளிக்கப்படும் எனவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment