Sunday, May 10, 2009

இராசையா இளந்திரையன் ஷெல் வீச்சில் படுகாயம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இளந்திரையன் என்று அழைக்கப்படும் இராசையா புனிதரூபன் அவர்கள் இன்று அதிகாலை இலங்கை இராணுவத்தின் கடும் ஷெல் வீச்சில் படுகாயம் அடைந்துதுள்ளார் என அறியப்படுகிறது.
நீண்டகால இடைவெளிக்கு பின் இளந்திரையன் அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு நேற்று சனிக்கிழமை செவ்வி ஒன்றை வழங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் சிறீலங்கா படையினரின் பாதுகாப்பு வலய மக்கள் பகுதி மீது நடாத்தப்படும் கடுமையான எறிகணைத்தாக்குதல்கள் தொடர்பிலும் ஐநாவின் பயிற்சி மற்றும் ஆய்வுகளுக்கான மையத்தின் செய்மதி படங்களை ஆதாரம்காட்டி கருத்து தெரிவித்திருந்தார்.

விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் கடந்த வாரம் சிறீலங்கா படையினர் மேற்கொண்ட தரையிறக்க முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும் இதில் எட்டு இராணுவக்கலங்கள் அழிக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார். இம் முயற்சி கடற்புலிகளால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

விடுதலைப்புலிகளின் வலிந்து தாக்கும் நடவடிக்கை தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் தற்பொழுது வலிந்த தாக்குதலை தற்காத்து தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் தலைமைத்துவத்தால் வலிந்து தாக்குதற்குரிய தள மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் இதனடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்திருந்தார்.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.