Sunday, May 10, 2009

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இலங்கை நிலவரம் உத்தியோகபூர்வமாக ஆராயப்படவேண்டும் என கோரிக்கை

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையினால் நடத்தப்படுகின்ற உத்தியோகபற்றற்ற ஒன்று கூடல்களின் மூலம் இலங்கை பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என்பதால், உடனடியாக உத்தியோக பூர்வமாக பாதுகாப்பு சபை கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என நான்கு சர்வதேச ஒழுங்கமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

இலங்கையின் மனிதாபிமான நிலவரங்கள் தொடர்பில் ஜப்பான் மேலும் விரைவாக செயற்பட வேண்டும் என, நான்கு சர்வதேச ஒழுங்கமைப்புகள் வலியுறுத்தியுள்ளனர்.

சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம், சர்வதேச அனர்த்த குழு, சர்வதேச மன்னிப்புச் சபை மற்றும் பாதுகாப்புக்கான பூகோள மையம் ஆகிய அமைப்புகள், ஜப்பான் பிரதமர் டாரோ அசோவிற்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றிலேயே இந்த வலியுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதன் ஊடாகவே நடைமுறைக்கு சாத்தியமான தீர்வினை ஆராய்ந்து முன்னெடுக்க கூடியதாய் இருக்கும் என இந்த அமைப்புகளால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கைக்கு நிதி வழங்கும் முக்கிய நாடு என்ற வகையில், எண்ணிக்கையற்ற உயிர்களை பாதுகாக்கும் வகையிலும், அங்கு மனித உரிமையை நிலைநாட்டி, அபிவிருத்தியினை மேற்கொள்வதிலும் ஜப்பான் அரசாங்கம் அக்கறையுடன் செயற்படும் என தாம் எதிர்பார்ப்பதாக அந்த கடித்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜப்பான் இலங்கை பொதுமக்கள் மீது கொண்டுள்ள அக்கறையினை காட்ட வேண்டிய தருணம் இதுவே எனவும் அந்த ஒழுங்கமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.

இதேவேளை ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையினால் நடத்தப்படுகின்ற உத்தியோகபற்றற்ற ஒன்று கூடல்களின் மூலம் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என்பதால், உடனடியாக உத்தியோக பூர்வமாக பாதுகாப்பு சபை கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.