Monday, May 11, 2009

உலகம் முழுவதும் தமிழீழ விடுதலை புலிகள் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்க ஜெயலலிதா குரல் கொடுக்கவேண்டும் - இயக்குனர் சீமான்

உலகம் முழுவதும் தமிழீழ விடுதலை புலிகள் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்க ஜெயலலிதா குரல் கொடுக்கவேண்டும் என்று இயக்குனர் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருச்சி புத்தூர் நால்ரோட்டில் திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கம் சார்பில் பரப்புரை பிரசார கூட்டம் நடந்தது. இயக்குனர் பாரதிராஜா தலைமையில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் சீமான்,
60 ஆண்டுகளாக இனப்பகை ஏற்பட்ட பின்னர் தமிழர்களும், சிங்களர்களும் எப்படி ஒருங்கிணைந்து வாழமுடியும்? தனி தமிழ் ஈழமே ஒரே வழி என்று அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறி இருக்கிறார்.

இலங்கைக்கு இராணுவத்தை அனுப்பி தனி ஈழத்தை உருவாக்குவோம் என்றும் சொல்லி இருக்கிறார். தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை தடைசெய்வதற்கு அழுத்தமாக குரல் கொடுத்தது நான் தான் என்று ஜெயலலிதா ஏற்கனவே பேசியவர் தான். எனவே அவர் ஈழத்தமிழர்களின் விடியலுக்காக தமது இன்னுயிர்களையும் துச்சம் என தமிழனுக்காக போராடும் மறவரான தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்திற்கு உலகம் முழுவதும் விதிக்கப்பட்ட தடையை நீக்கும்படி குரல் கொடுத்தால் போதும், மற்றதை நாங்கள் பார்த்து கொள்வோம். இந்த ஒரு உதவியை மட்டும் ஜெயலலிதா செய்யவேண்டும். ஜெயலலிதா எப்போதுமே தான் கொண்டிருக்கும் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பவர். அந்த அடிப்படையில் இந்த நிலைப்பாட்டிலும் உறுதியாக இருப்பார் என்று நம்புகிறோம் என்றார்.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.