ஜ.நா உயர் அதிகாரி விஜய் நம்பியாரின் சகோதரர் சதீஷ் நம்பியார் இலங்கை இராணுவத்தின் ஆலோசகராக 2002 இல் இருந்து பணி புரிவதாக அறியப்படுகிறது. ஜக்கிய நாட்டின் உயர் அதிகாரியும் துணைச் செய்லாளர் நாயகமுமான விஜய் நம்பியார் பல தடவை சமாதானத் தூதுவராக இலங்கைக்கு அனுப்பபட்டுள்ளார்.
இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்த சிறப்புத் தூதுவராக பல தடவை இவர் இலங்கை வந்து சென்றிருக்கிறார். இந்த நிலையில் இவரின் அண்ணா சதீஷ் நம்பியார் இலங்கை இராணுவத்தால் சம்பளத்திற்கு அமர்த்தப்பட்ட ஆலோசகர் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் இவரை எவ்வாறு இலங்கைக்கு சமாதானத் தூதுவராக அனுப்ப முடியும் ? இவர் இதய சுத்தியுடன் செயல்படுவாரா ? இவரின் அண்ணாவின் ஆழுமை அல்லது அதிகாரம் குடும்பத்தில் பிரதிபலிக்குமா ? அவரின் கருத்துக்களை விஜய் நம்பியார் ஏற்றுக்கொள்கிறாரா ?, ஒரு நடு நிலமை வாதியாக இருப்பாரா ? என்ற பல சந்தேகங்கள் தற்போது தோன்றியுள்ளது.
இது குறித்து அதிர்வு இணைய வாசகர்கள் ஜ.நா வை தொடர்பு கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறோம்.
No comments:
Post a Comment