Saturday, May 16, 2009

ஈழத் தமிழருக்கு ஆதரவானவர்கள் மீது தாக்குதல் - பாராதிராஜா அலுவலகம் தாக்கியழிப்பு - சீமானுக்கு காவல்துறை பாதுகாப்பு

இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கம் ஆரம்பித்து பிரச்சாரம் செய்துவந்தார்கள் தமிழ் திரையுலகினர்.

பாரதிராஜா தலைமையில் இயக்குநர்கள் சீமான், ஆர்.சுந்தர்ராஜன், மணிவண்ணன், ஆர்.கே.செல்வமணி போன்றோர் தீவிர பிரச்சாரம் செய்துவந்தார்கள்.

மக்களவை தேர்தல் முடிவுகள் வெளிவந்து காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ள நிலையில், சென்னையில் நேற்று இரவு இயக்குநர் பாரதிராஜா அலுவலகம் மர்ம கும்பலால் தாக்கப்பட்டது. அலுவலகத்தில் இருந்த பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

இதையொட்டி, இயக்குநர்கள் ஆர்.சுந்தரராஜன், சீமான் வீடுகளுக்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்கிடையே இயக்குநர் சீமானை கைது செய்வதற்காக அடுத்து ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வாக்குச்சாவடியில் குழப்பம் விளவிக்க முனைந்ததாக குற்றம்சாட்டப்பட்டு இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.