
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான ஜப்பானின் விசேட பிரதிநிதி யசூசி அகாசி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் இன்று சந்தித்து கலந்துரையாடினார்.
இந்த சந்திப்பின்போது நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைவரம் குறித்தும் வன்னியிலிருந்து இடம்பெயர்ந்துவரும் மக்கள் தொடர்பிலும் கூடிய கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்துவரும் மக்களை அரசு கவனிக்கும் விதம் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யசூசி அகாசிக்கு விளக்கமளித்துள்ளார்.
அத்தோடு புதுமாத்தளன் மக்கள் பாதுகாப்பு வலயத்தினுள் புலிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை மீட்பதற்காக படையினர் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்தும் அகாசிக்கு விளக்கமளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட அகாசி வவுனியாவுக்கு சென்று இடம்பெயர்ந்த மக்களை பார்வையிட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
No comments:
Post a Comment