Tuesday, May 5, 2009

அவுஸ்திரேலியா மெல்பேர்ணில் ஓயாத உரிமைக்குரல்

மெல்பேர்ண் வாழ் தமிழ் சமூகத்தினால் நாளை புதன்கிழமை முதல் ஒவ்வொரு நாளும் மாலை 4 மணி தொடக்கம் 6மணி வரை இந்த ஓயாத கவனயீர்ப்பு நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவிருக்கின்றது.


இதன் முதலாவது நாள் முன்னெடுப்பாக, மெல்பேர்ண் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள சுதந்திர சதுக்கத்தில் மாலை 4 மணிக்கு நிகழ்வு ஆரம்பமாகிறது.

மாலை 6 மணிவரை தொடரும் இந்த முன்னெடுப்பில் அனைத்து மெல்பேர்ண் தமிழ் உறவுகளையும் சிரமம் பாராது கலந்து கொள்ளும் வண்ணம் ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.

நிகழ்விலே பங்கெடுக்கும் தமிழ் உறவுகள் அனைவரையும் கறுப்பு வெள்ளை ஆடைகளை அணிந்து வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

எம் உறவுகள் படும் அவலங்களையும்,சிறிலங்கா அரசு நிகழ்த்தும் கொடூரமான இன அழிப்பு பற்றிய ஆவணப்பதாகைகளையும் தன்னெழுச்சியாக மக்களிடம் இருந்து எதிர்பார்க்கப்படுகிறது.

மாலை வேளை பணி முடித்து வீடு திரும்பும் பல்லின மக்களிடம் ஆயிரக்கணக்கில் துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்படவிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு நாள் முன்னெடுப்புகளையும் மெல்பேர்ண் வாழ் தமிழின செயற்பாட்டாளர்கள்,தமிழ் இளையோர், தமிழ் சமூகத்தினர் பலரும் ஒழுங்கமைத்து நடாத்த முன்வந்துள்ளார்கள்.

தாய்நிலத்திலே இடைவிடாது ஓயாது இன அழிப்பு போர் தொடரும் நிலையில்,அந்த இன அழிப்பு போரால் அழிந்து போகும் எம் உறவுகளை காக்க புலத்திலே நாம் இடைவிடாது போராட்டம் செய்யவேண்டிய கடமையில் இருக்கிறோம்.

இந்த தொடர் ஒயாத கவனயீர்ப்பு நிகழ்வுகள் மெல்பேர்ண் வாழ் தமிழ் சமூகத்தின் உணர்வுபூர்வமான பங்களிப்பாக மாறி அவுஸ்திரேலிய அரசின் மனக்கதவுகளை திறக்க வேண்டும்.


"வந்த ஊரில் வாழ்வை தொலைக்காது..!!!
சொந்த ஊரின் சுடலையில் எரிவதே மேல்"

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.