சிறீலங்கா படையினர் கொழும்பு கொட்டகேனா, கிறான்பாஸ், முகத்துவாரம், வெள்ளவத்தை, பம்பலப்பிட்டிய, மற்றும் கொல்பிட்டி ஆகிய பகுதிகளில் கடந்த மூன்று நாட்களில் அதிகாலைமுதல் இரவு வரை மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் 75 தமிழர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இவர்கள் அனைவரும் யாழ்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் வெசாக் தினத்தை முன்னிட்டு பாதுகாப்பினை அதிகரிக்கும் நோக்குடன் இவ்வர்களை கைது செய்ததாக இக்கைதுக்கான காரணத்தினை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சுமார் நூறு தமிழர்கள் சிறீலங்கா கொழும்பு மற்றும் தெமட்டகொட காவல்துறைநிலையங்களில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் தெரியவருகிறது.
No comments:
Post a Comment