யாழ். குடாநாட்டில் உள்ள விடுதலைப் புலி உறுப்பினர்கள் சகல வன்முறைகளையும் கைவிட்டு 48 மணித்தியாலத்திற்குள் இராணுவத்திடம் சரண் அடையுமாறு கேட்கப்பட்டுள்ளது.
அதேவேளை விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு மற்றும் தங்குமிடம் உள்ளிட்ட வசதிகளைக் கொடுத்து உதவுவது தவறு என்றும் அவர்களை இராணுவத்திடம் சரண் அடையச் செய்வதற்கான ஏற்பாடுகளையும் செய்யுமாறும் பாதுகாப்புப் படைகளின் யாழ் தளபதி பொது மக்களைக் கேட்டுள்ளார்.
இது தொடர்பாக பலாலி பாதுகாப்புப் படைகளின் யாழ் தளபதி விடுத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
யாழ் மக்களின் சமாதான வாழ்க்கை நிலையை சீர்குலைக்கத் தயாராக இருக்கும் விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு மற்றும் தங்குமிட வசதிகள் உள்ளிட்ட வேறு தேவைகளை நிறைவேற்றுவதற்காக உதவி புரிவது தவறு என்று பொதுமக்களுக்கு அறியத் தருவதோடு, அவர்கள் உங்களின் உறவாக அல்லது நண்பர்களாக இருந்தாலும் அவர்களின் எதிர்காலத்தை வளமாக்கிக் கொள்வதற்காக இராணுவத்திடம் சரண் அடைவதற்கு தேவையான செயற்பாடுகளைச் செய்யுங்கள்.
சரண் அடைபவர்கள் எவ்வித பயம், சந்தேகமின்றி உங்களால் அவர்களைச் சரணடையச் செய்ய முடியாவிட்டால் புலனனாய்வு தகவலின் படி அவர்கள் கைது செய்யப்பட்டால் அவர்களுக்கு பாதுகாப்பு அளித்த நீங்களும் குற்றவாளியாக நீதிமார்க்கப்படி கணிக்கப்படுவீர்கள்.
பயங்கரவாதச் செயலுக்கு தொடர்புடையவர்களின் புனர்வாழ்வு நிமிர்த்தம் அரசாங்கம் செய்திருக்கும் இந்த நற்செயற் திட்டத்திற்கு உங்களதும், மற்றவர்களினதும் ஒத்துழைப்பும் துணையும் முழுமையாகக் கிடைக்க வேண்டும் என அறியத் தருகின்றேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment