Wednesday, May 6, 2009

வன்னியில் 3 இலட்சம் பேர் இருந்தபோது 70 ஆயிரம் பேரே இருந்ததாக அரசு பொய் கூறியது: அரசியல் இலாபம் கருதி சர்வதேசத்தை பகைக்கிறது: ரணில் விசனம்


அரசாங்கம் 70 ஆயிரம் மக்கள் தான் வன்னியில் உள்ளதெனக் கூறியது. அங்கு 3 இலட்சம் மக்கள் இருந்துள்ளனர். அரசு அரசியல் இலாபத்துக்காக சர்வதேச நாடுகளை பகைப்பது நாட்டின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல' என்றும், அரசின் அநாவசிய செயற்பாடுகளே சர்வதேச அழுத்தம் ஏற்பட காரணமெனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
மேல் மாகாண சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை மாலை கட்சியின் தலைமையகமான ஸ்ரீ கொத்தாவில் இடம் பெற்றபோது உரையாற்றுகையிலேயே ரணில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது;

மேல் மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினர் பயங்கரவாதிகளுக்கு எதிரான யுத்த வெற்றியை காண்பித்தனர்.

பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் வெற்றி பெறுவதற்கு காரணம் வெளிநாடுகள் எமக்கு உதவியமையேயாகும். இந் நிலையில் அரசாங்கம் தனது அரசியல் இலாபத்துக்காக சர்வதேச நாடுகளை பகைப்பது நாட்டின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல.

நான் யுத்த நிறுத்த உடன்படிக்கை செய்த பின்னரே இலங்கைக்கு தடுக்கப்பட்டிருந்த ஆயுத விற்பனை நீக்கப்பட்டதுடன். வெளிநாடுகள் பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்படிக்கை செய்துகொள்ள இலங்கையுடன் முன்வந்தன.

இதன் விளைவாக குறிப்பாக கடற் புலிகளின் ஆயுத கடத்தல் தடுக்கப்பட்டது. இதற்கு இந்தியா மற்றும் அமெரிக்கா எமக்கு உதவியது.அமெரிக்கா இலங்கைக்கு பாதுகாப்பு நடவடிக்கைக்காக பயிற்சிகளையும் கப்பல்களையும் தந்தது.

அத்துடன், புலிகளின் சர்வதேச ஆயுதக் கொள்வனவு தடுக்கப்பட்டதுடன் புலிகள் அமைப்பின் நிதிசேகரிப்பு வெளிநாடுகளில் தடுக்கப்பட்டது. நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இன்று சர்வதேச நாடுகள் அரசுக்கு மனிதாபிமான நடவடிக்கை குறித்தும் நாட்டு பிரச்சினைக்கு தீர்வை முன்வைக்குமாறும் அழுத்தம் கொடுக்கின்றன.

அரசாங்கம் 70 ஆயிரம் மக்கள் தான் புலிகளின் பிடியில் உள்ளதெனக் கூறியது. அங்கு 3 இலட்சம் மக்கள் இருந்துள்ளனர். இவ்வாறு அரசு கருத்து தெரிவிப்பதாலும் வெளிநாடுகளுக்கு எதிராக தமது நலனுக்காக அநாவசிய செயற்பாட்டினாலுமே சர்வதேச அழுத்தம் பிரதானமாக ஏற்படுகின்றது.

அவர்கள் சிவில் மக்களின் நலன் குறித்தே பேசுகின்றனர். வெளிநாடுகள் இலங்கையுடன் இணைந்தே செயற்படுகின்றது. அவர்கள் இலங்கைக்கு எதிராக புலிகளுக்கு உதவுகின்றனராயின் அந்நாடுகள் குறித்து பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.

இது குறித்து பாராளுமன்றத்தில் நாம் விவாதிக்கலாம். இந்நாடுகள் செய்யும் உதவிகளை அரசாங்கம் அலட்சியம் செய்யமுடியாது என்றார்.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.