இந்த நிலையிலேயே மாவிலாறு மற்றும் கிழக்கு மாகாண விடுவிப்பின்போது 2 900 இராணுவத்தினரும், வடக்கு கிழக்கு தவிர்ந்த பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் 1300 இராணுவத்தினரும் (கபறனை தாக்குதல் உட்பட), மன்னார் பிரதேசங்களில் எற்பட்ட மோதல்களின்போது 3100 இராணுவத்தினரும், மாங்குளம் பிரதேச மீட்பின்போது 2500 பேரும், மல்லாவி, துணுக்காய் பகுதிகளின் மீட்பின்போது 3500 பேரும், பின்னர் நடந்த இடை மோதல்களில் 1700 பேரும் பூனகரி மோதல்களின்போது 4200 பேரும், கிளிநொச்சி கைப்பற்றுதலில் 2600 பேரும், பின்னர் விடுதலைப்புலிகளின் கிளிநொச்சி ஊடறுப்புத்தாக்குதலில், 2300 பேரும், விடுதலைப்புலிகளின் குளம் உடைப்புத்தாக்குதலில் 3300 பேரும் பின்னர் இடம்பெற்ற இறுதித்தாக்குதலில் மிகுதி இராணுவத்தினரும் கொல்லப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை தமது தரப்பு இழப்புக்கள் பற்றி குறிப்பிட்ட சிறி லங்கா பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ, இறுதிமோதல்களில் 6200 படையினர் மட்டுமே பலியானதாகவும், இத்தனைநாள் இடம்பெற்றமோதல்களில் சுமார் 22 அயிரம் வரையான படைவீரர்களே இறந்துள்ளதாக தெரிவித்தமை மிகவும் கேலிக்குரியதெனவும் இதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment